விழுப்புரம் தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் தொடர வாய்ப்பு அளியுங்கள் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் பேச்சு

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைத் கொண்டு வந்துள்ளோம். மேலும், திட்டங்கள் தொடர எனக்கு வாய்ப்பு அளியுங்கள் என தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் பேசினார்.

கோலியனுார் ஒன்றியத்தில் நடந்த பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், 'விழுப்புரத்தில் தி.மு.க., ஆட்சியில்தான் ஏராளமான திட்டங்கள் வந்துள்ளன. அரசு மருத்துவக்கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, புதிய பஸ் நிலையம், கலெக்டர் பெருந்திட்ட வளாகம் என பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

தளவானுாரில் புதியதாக தடுப்பணை பணி நடக்கிறது. வளவனுாரில் புதிய குடிநீர் திட்டம் முடித்து குடிநீர் விநியோகம் நடக்கிறது. வடவாம்பலத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் தொல்லியல் பொருள்களை காட்சிப்படுத்திட புதிய அருங்காட்சியகம் கட்டும் பணி நடக்கிறது.

விழுப்புரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. பில்லுார் மலட்டாறில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், மேலும், கூடுதல் பள்ளி கட்டடங்கள், அங்கன்வாடிகள், ரேஷன் கடைகள் என தொகுதி முழுதும் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியில், மீண்டும் இத்திட்டங்கள் தொடர எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என்றார்.

Advertisement