பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு

மாண்டியா: கிரிக்கெட் பந்தில், கஞ்சா மற்றும் மொபைல் போன் மறைத்து வைத்து, சிறைக்குள் வீசியவரை போலீசார் தேடுகின்றனர்.

மாண்டியா மாவட்ட சிறையில், நேற்று அதிகாலை காம்பவுன்ட் சுவற்றில் இருந்து, கிரிக்கெட் பந்தை யாரோ வீசி எறிந்தனர். இந்த பந்தை கைதி நாகா என்ற ஹந்திநாகா கொண்டு சென்றார்.

இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதை கவனித்த சிறை அதிகாரிகள், உடனடியாக கைதி இருந்த அறைக்கு சென்று, பந்தை கைப்பற்றி அதை வெட்டி உள்ளே பார்த்தனர். 10 கிராம் கஞ்சாவும், ஒரு மொபைல் போனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை கைதி நாகாவுக்காக அனுப்பப்பட்டதா, வேறு கைதிக்காக வந்ததா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் மறைத்து வைத்து, சிறைக்குள் எரிந்தவர்களை போலீசார் தேடுகின்றனர். கைதிகளின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வரும் போது போதைப்பொருள், மொபைல் போன் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை மறைத்து கொண்டு செல்கின்றனர்.

ஆனால் சிறை ஊழியர்கள் சோதனை நடத்தும் போது, பொருட்கள் சிக்குகின்றன. எனவே தற்போது பந்துக்குள் போதைப்பொருள், மொபைல் போன் வைத்து சிறைக்குள் வீசி, கைதிகளிடம் சேர்க்கின்றனர்.

Advertisement