பா.ஜ., நகர தலைவரை திட்டிய மகளிரணி தலைவி மீது வழக்கு

விழுப்புரம்: பா.ஜ., நகர தலைவரை திட்டிய, மாவட்ட மகளிரணி தலைவி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி வனிதா சுதா, 46; பா.ஜ., நகர தலைவர். இவர் கடந்த 12ம் தேதி சந்தானகோபாலபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அக்கட்சியின் தெற்கு மாவட்ட மகளிரணி தலைவியான நரசிங்கபுரத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மனைவி யமுனாராணி, 43; என்பவர், வனிதா சுதாவை பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறி திட்டினார்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் யமுனா ராணி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement