வாரம் ஒரு முறை மோடி வருகிறார் நிதி வரவில்லை: உதயநிதி கிண்டல்
செஞ்சி: செஞ்சி தொகுதி தி.மு.க., வேட்பாளர் மஸ்தானை ஆதரித்து செஞ்சி கூட்ரோட்டில் துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை கூறி ஓட்டு கேட்க வந்துள்ளேன். செஞ்சி தொகுதியில் போட்டியிடும் மஸ்தான் 2 முறை எம்.எல்.ஏ., வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 40 ஆண்டு காலம் மக்கள் சேவை என்பது சாதாரண விஷயம் அல்ல. செஞ்சி நகரம் வளர்ச்சி அடைவதற்கு காரணம் மஸ்தான் மேற்கொண்டுள்ள பணிகள் தான்.
டில்லி அணிக்கும், தமிழ்நாட்டு அணிக்கும் தான் போட்டி. டில்லி அணியை தோற்கடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கூறி வருகிறார்.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் மோடி வாரத்திற்கு ஒருமுறை தமிழகத்திற்கு வருகிறார். ஆனால் திட்டங்கள் வருவதில்லை, நிதியும் ஒதுக்குவதில்லை. இவர்களை தமிழகத்தில் கால் உன்றவிட்டால் தமிழகம் பின்னோக்கி போய்விடும் .
இவ்வாறு உதயநிதி பேசினார்.
மேலும்
-
மொபைல் போன் இல்லாத இனிய உலகம்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இபிஎஸ் அதிமுகவை கலைத்து விடலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி