காவல்துறை, வருமான வரித்துறை சோதனை; பறிமுதல் தொகை ரூ.1.52 கோடியாக உயர்வு

விழுப்புரம்: தேர்தலையொட்டி, வருமான வரித்துறை மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் இதுவரை 1.52 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த மார்ச் 15ம் தேதி முதல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் குழுக்கள் மூலமும் கண்காணிப்பு நடந்து வருகிறது. இக்குழுக்கள் வாகன சோதனை, தேர்தல் முறைகேடுகளை கண்காணித்தல் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, நேற்று வரை பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றால் 76 லட்சத்து 383 ரூபாய் மற்றும் மதுபானங்கள், போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேபோல், வருமான வரித்துறை மற்றும் காவல்துறை சோதனைகள் மூலம் 1 கோடியே 52 லட்சத்து 14 ஆயிரத்து 627 ரூபாய், மற்றும் மதுபானங்கள், போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement