மரத்தின் மீது பைக் மோதி பரோட்டா மாஸ்டர் பலி

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் பரோட்டா மாஸ்டர் உயிரிழந்தார்.

தியாகதுருகம் அடுத்த விருகாவூரை சேர்ந்தவர் மணி மகன் வேலு, 40; இவர், நீலமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் பரோட்டா மாஸ்டர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பைக்கில் வேலு வீட்டிற்கு புறப்பட்டார். குரூர் ஏரிக்கரை அருகே சென்றபோது, வேலு ஓட்டி சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement