ஓட்டுச்சாவடிகளில் பல வண்ணங்களில் குறியீடு; வாக்காளர்களின் சிரமத்தை தவிர்க்க ஏற்பாடு
சென்னை: சென்னையில் சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடும் வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், ஓட்டுச்சாவடி மையங்ககளில் பல வண்ணங்களில் குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. ஓட்டுப் போடுவதற்கு இன்னும் ஒரு தினமே இருப்பதால், ஓட்டுச்சாவடிகளை தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் காண்பதற்கு வசதியாக, பல வண்ணங்களில் குறியீடுகளை தேர்தல் ஆணையம் பொருத்தி வருகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 975 இடங்களில் அமைப்பட்டுள்ள 4,085 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். வாக்காளர்களுககு தேவையான குடிநீர் வசதி, மின்வசதி, கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 10க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளைக் கொண்ட ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் காண்பதற்கு வசதியாக, பல வண்ணங்களில் குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. குறியீட்டு தகவலை கடைபிடித்து, வண்ணமிட்ட பாதைகளின் வழியே நடந்து சென்று ஓட்டுச்சாவடிகளை அடையாளம். இதன் மூலம், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளை அடைவதில் எந்த சிரமும் ஏற்படாமல், மிகவும் உதவிகரமாக இருக்கும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
-
திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது
-
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் தான்; துல்லிய கருத்துகணிப்புகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!