திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது
நமது நிருபர்
பெரம்பலூர் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் காரில் ரூ.2.44 கோடி சிக்கியது. இந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிகுட்பட்ட செங்குணம் கிராமம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது கார் டிக்கியில் 5 அட்டை பாக்ஸில் ரூ.2.44 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கார் மற்றும் 2.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு, பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் கார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் ராஜேஷ் கிருஷ்ணன் உட்பட இருவரிடமும் வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மீண்டும் DMK ஆட்சி வந்தால் தமிழ்நாட்டை கடவுளே முயன்றாலும் காப்பாற்றமுடியாது
டிராமா பண்றாங்க ஒரு மாதத்தில் செட்டில் ஆகி விடும் கூட்டு கலவாணிகள்
சிக்காத பணம் பல்லாயிரம் கோடிகள் ஆல்ரெடி பட்டுவாடா ஆகிவிட்டது...
ரொம்ப குறைச்சலா தெரியுது. மீதி முன்னாடியே போயிருக்கும்.
ஐயோ பாவம். "ஒழுங்காக பணத்தை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யத்தெரியாத உங்களுக்கெல்லாம் எதற்கு பதவிகள்?" என்று இவர்கள் ஸ்டாலினிடமிருந்து நிறைய திட்டு வாங்கி இருப்பார்கள்.
தேர்தலில் ஜெயிக்கவேண்டும் என்றால் எந்த தில்லாலங்கடி வேலையும் செய்வாங்க இந்த திருட்டு திமுக இது திமுக குல தொழில் வாலையடிவாழையாக அவர்கள் செய்யும் ரவுடித்தனம் இது மாதிரி பல உதாரணம் உண்டு ..
ஒரு தொகுதியில் 2.5 கோடி என்றால்.. 234 தொகுதிகளுக்கு 600 கோடி ரூபாய். 2021 இலிருந்து கொள்ளை அடிக்க பல்லாயிரம் கோடியில் இது ஜுஜுபி.மேலும்
-
அலுவலகத்தில் லட்சணக்கணக்கான பணம் பறிமுதல்; காங் எம்பி கார்த்தி சமாளிப்பு
-
அதிகாரங்களை ஏவி என்னை மிரட்ட முடியாது; விஜய்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு