நந்தினிக்கு சிலிண்டர் பற்றாக்குறை: அமைச்சர் வெங்கடேஷ் மறுப்பு
சாம்ராஜ்நகர்: ''நந்தினி உற்பத்தி பொருட்களை தயாரிக்க, காஸ் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை,'' என கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார்
சாம்ராஜ்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நந்தினி உற்பத்தி பொருட்களை தயாரிக்க, சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அரசு சார்ந்த நிறுவனம் என்பதால், சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது.
கோடைக்காலம் என்பதால், வரும் நாட்களில் நந்தினி உற்பத்தி பொருட்கள் விற்பனை, மேலும் அதிகரிக்கும்.
அறிக்கை அடிப்படையில் நசீர் அகமதுவிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டு உள்ளது. ம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவியை விரும்புவதில் தவறு இல்லை. அனைத்து முடிவுகளையும் மேலிடமே எடுக்கும். தாவணகெரே தெற்கு, பாகல்கோட் என, இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
ஏப்ரல் 21ல், முதல்வர் சித்தராமையா குண்டுலுபேட் வருகிறார். நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவில், பல்வேறு பணிகளை துவக்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஏற்றமா, கன்சாலிடேஷனா... செய்திகளே தீர்மானிக்கும்!
-
இ-85 எத்தனால் கொள்கையை பரிசீலிக்க மத்திய அரசு திட்டம்
-
சர்ச்சையில் 'லென்ஸ்கார்ட்' 5% சரிந்த பங்குகள்
-
ஊழியர்களுக்கு 95 லட்சம் பங்குகள் ஒதுக்கிய 'மீஷோ'
-
சந்தை ஏற்ற இறக்கத்திலும் சரியாத மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., முதலீடு
-
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு எதிராக பிரசாரம் செய்த திருமாவளவன்: வி.சி.க.,வினர் கடும் அதிருப்தி