சந்தை ஏற்ற இறக்கத்திலும் சரியாத மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., முதலீடு

ப ங்குச்சந்தையில் நிலவும் கடும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், இந்திய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டுகளில் எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வதை உறுதியுடன் தொடர்வது, 'கோட்டக்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பங்கு முதலீடு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் சராசரி சொத்து மதிப்பு கடந்த செப்டம்பர் 2024ல் இருந்த உச்சத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 14 சதவீதம் சரிந்துள்ளது. குறிப்பாக, மார்ச் 2026ல் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவு முதலீட்டாளர்களின் வருமான விகிதத்தை பெருமளவு பாதித்துள்ளது.

வருமானம் குறைந்தாலும் முதலீட்டாளர்கள் பின்வாங்கவில்லை. நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஈக்விட்டி பண்டுகளில் மட்டும் 1.10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செ ய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மாதங்களில் 'ஸ்மால்கேப் மற்றும் குறிப்பிட்ட துறை சார்ந்த பண்டுகள், மற்ற பிரிவுகளை விட அதிக சரிவை சந்தித்துள்ளன. அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்து வந்தாலும், சிறு முதலீட்டாளர்களின் எஸ்.ஐ.பி., முதலீடே சந்தையை நிலைப்படுத்தி வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement