ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு எதிராக பிரசாரம் செய்த திருமாவளவன்: வி.சி.க.,வினர் கடும் அதிருப்தி
சென்னை: சென்னை, திரு.வி.க., நகரில், போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பொற்கொடிக்கு எதிராக, வி.சி.க., தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அந்த தொகுதியை, தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியபோது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஏற்கவில்லை.
'என்னை போன்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும், ஒரு தலைவரை எதிர்த்து வி.சி.க., போட்டியிடாது' என, திட்டவட்டமாக கூறினார்.
அதேநேரம், படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, திரு வி.க., நகர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார்.
ஜெகன் மூர்த்திக்கு ஆதரவாக செயல்பட்ட திருமாவளவன், பொற்கொடிக்கு எதிராக, திரு.வி.க. நகரில் பிரசாரம் செய்தார். இது வி.சி.க.,வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
மாற்று கட்சியில் இருந்தாலும், வி.சி.க., நிர்வாகிகள் பலருக்கு, ஆம்ஸ்ட்ராங் உதவி செய்தார். அதனால், அவர் மறைந்தாலும் அவர் குடும்பத்தினர் மீது வி.சி.க.,வினர் மரியாதை வைத்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, தனி கட்சி ஆரம்பித்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டாலும், திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். இதனால், பொற்கொடிக்கு எதிராக அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என, எதிர்பார்த்தோம்.
ஆனால், பொற்கொடிக்கு எதிராக திருமா வளவன் பிரசாரம் செய்துள்ளார். திருமாவின் செயல், வி.சி.க.,வினருக்கு நெருடலை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (13)
பேசும் தமிழன் - ,
21 ஏப்,2026 - 18:07 Report Abuse
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்க்கு ? 0
0
Reply
அப்பாவி - ,
21 ஏப்,2026 - 15:13 Report Abuse
இறந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி என்பதைத் தவிர வேற ஒரு தகுதியும் இல்லாதவர். ஜெயிச்சு சட்டசபைக்குப் போய் என்ன செய்வாரு? 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
21 ஏப்,2026 - 11:55 Report Abuse
திருமாவளவன் ஒரு ஆப்ரஹாமிய மத பின்பற்றி என்ற வகையில் அவர் தலித்துகளுக்கு எதிராகவே இதுவரை செயல்பட்டு வருகிறார்..தலித்கள் ஹிந்துக்கள் என்பதால் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இவருக்கு கட்டளையாக இட்டவர்கள் இவர் சார்ந்த மத போதகர்கள்... இனியாவது தலித் மக்கள் இந்த ஆளை முற்றிலும் புறக்கணிப்பதே அவர்கள் எதிர் கால நலனுக்கு நல்லது... 0
0
Reply
பாரதி - ,
21 ஏப்,2026 - 11:47 Report Abuse
திருமாவளவன் தனிநபர் இல்லை சர்ச் பாதிரியார்களின் பிடியலில் உள்ள பொம்மை 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
21 ஏப்,2026 - 09:19 Report Abuse
விசுவாசமான பிளாஸ்டிக் சேர் அடிமை ....... 0
0
Reply
SIVA - chennai,இந்தியா
21 ஏப்,2026 - 08:27 Report Abuse
எதுக்கு வந்தோம் என்பது தெரியம்மாள் இவன் முழு சமையல்காரனாகவே மாறி விட்டான் என்று ஒரு வசனம் வரும் , அது போன்று ஒரு நபர் எதுக்கு கட்சி நடுத்துறோம் என்று தெரியம்மாள் முழு தீயமூக
காரனாகவேய மாறி விட்டார் ..... 0
0
Reply
SIVA - chennai,இந்தியா
21 ஏப்,2026 - 08:24 Report Abuse
முழு சந்திரமுகியாகிய கங்காவை பார் என்ற வசனம் நியாபகம் வருகின்றது .... 0
0
Reply
Rock - ,
21 ஏப்,2026 - 08:02 Report Abuse
DMK Slave Forever 0
0
Reply
venugopal, s - ,
21 ஏப்,2026 - 07:41 Report Abuse
இதுதான் சமூக நீதி. தனக்கு மட்டும் பிளாஸ்டிக் சேர் உறுதி செய்தால் போதும். பா சா கா, ஆர் எஸ் எஸ் உள்ளே வந்துடும். இப்படிக்கு எழுச்சி dumilar 0
0
Reply
Sun - ,
21 ஏப்,2026 - 07:37 Report Abuse
தன் இனத்தை சார்ந்த ஒரு பட்டியல் இனப் பெண்ணை, அதுவும் இளம் வயதில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் கஷ்டப் பட்டு வாக்கு சேகரிக்கும் ஒரு பெண்ணை தோற்கடிக்க திருமா நினைப்பது அவரது எஜமானர் ஸ்டாலினுக்கு வேண்டுமானால் சந்தோசத்தை தரலாம். ஆனால் பட்டியலின மக்கள் திருமாவை மன்னிக்க மாட்டார்கள். தனது மிதமிஞ்சிய ஸ்டாலின் விசுவாசத்தால் பட்டியலின மக்களின் முழு நம்பிக்கையையும் இழந்து விட்டார் திருமா. 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
-
தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
Advertisement
Advertisement