இ-85 எத்தனால் கொள்கையை பரிசீலிக்க மத்திய அரசு திட்டம்

1

புதுடில்லி: மேற்கு ஆசிய போரால், இ- 85 என்ற 85 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல் தொடர்பான செயல்பாட்டு கொள்கையை மத்திய அரசு ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலருக்கு அதிகமாக இருந்தது. அதன் விலை, ஒரு டாலர் அதிகரித்தாலும், இந்தியாவிற்கு 16,000 கோடி ரூபாய் வரை இறக்குமதி செலவு அதிகரிக்கும்.

இந்த இ-85 எத்தனால் கலப்பு பெட்ரோலில், 85 சதவீதம் எத்தனாலும், 15 சதவீதம் பெட்ரோலும் இருக்கும். தற்போது இந்தியாவில், இ-20 பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் மொத்த எத்தனால் தேவை 1,100 கோடி லிட்டராக உள்ள நிலையில், தேவைக்கு அதிகமாக 2,000 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், பெட்ரோலில் எத்தனால் கலப்பை மேலும் அதிகரிக்க, எத்தனால் உற்பத்தியாளர் சங்கங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.

இ-85 பெட்ரோலில் இயங்கும் வாகன விலை, உற்பத்தி செலவுகள், எரிபொருள் இருப்பு, வாகன மைலேஜ் உள்ளிட்ட பலவற்றில் பிரத்யேகமான வாகன சோதனைகள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement