ஏற்றமா, கன்சாலிடேஷனா... செய்திகளே தீர்மானிக்கும்!




நிப்டி

Tamil News
Tamil News
இறக்கத்தில் ஆரம்பித்து 10 மணிக்கு மேல் சற்று ஏற்றம் கண்டு பின்னர் 3.20 மணியளவில் ஏற்றம் கண்ட புள்ளிகள் அனைத்தையும் இழந்த நிப்டி நாளின் இறுதியில் 11 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும் 14 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு அதிகபட்சமாக 0.56 சதவீத இறக்கத்துடனும், நிப்டி100 குறியீடு அதிகபட்சமாக 0.06 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 5 குறியீடுகள் ஏற்றத்துடனும் 14 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., அண்டு டெலிகாம் குறியீடு அதிகபட்சமாக 1.49 சதவீத இறக்கத்துடனும், நிப்டி மீடியா குறியீடு அதிகபட்சமாக 0.90 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,427 பங்குகளில் 1,261 ஏற்றத்துடனும் 2,043 இறக்கத்துடனும், 123 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

குறுகியகால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலேயே நிப்டி நிறைவடந்துள்ளது. மொமெண்டம் இண்டிக்கேட்டர்கள் ஏற்றத்திற்கு சாதகமாகவே இருக்கின்றன. 24,400 - 24,800 என்ற லெவல்களில் கடினமானதொரு ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. இதுதவிர, ஸ்டொக்காஸ்டிக்கும் சற்று ஓவர் பாட் ஆகவே இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் 24,400ஐ தாண்டி வேகமானதொரு ஏற்றம் வந்தால் மட்டுமே நிப்டி 24,800 வரை செல்ல வாய்ப்புள்ளது.

செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இல்லாவிட்டால் கன்சாலிடேஷனோ அல்லது லாபத்தை வெளியே எடுக்கும் நோக்கத்துடனான விற்பனையோ வந்துவிட வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 24,000 மற்றும் 23,800ல் மட்டுமே நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.



ஆதரவு 24,240 24,120 24,025

தடுப்பு 24,475 24,600 24,675

Advertisement