பெரம்பூரில் தி.மு.க.,வினர் பண பட்டுவாடா: பா.ம.க., திலகபாமா குற்றச்சாட்டு
பெரம்பூர்: தி.மு.க., நிர்வாகிகள், அதிகாரிகள் ஆதரவுடன் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக, பெரம்பூர் தொகுதி பா.ம.க., வேட்பாளர் திலகபாமா பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளார்.
சென்னை மாநகராட்சி 44வது வார்டு உட்பட்ட பகுதியில், கார் ஒன்றில் பதுக்கி வைத்து பணப்பட்டுவாடா நடப்பதாக பெரம்பூர் தொகுதி பா.ம.க., வேட்பாளர் திலகபாமாவிற்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், அப்பகுதி தி.மு.க., கவுன்சிலரின் வீட்டில் 5 கோடி ரூபாய் அளவிற்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
ஆனால், அதிகாரிகள் மற்றும் போலீசார் தாமதமாக வந்ததோடு, மெத்தனமாக சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், தி.மு.க.,வினர் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த திலகபாமா, 'அதிகாரிகள் வந்த தகவல் தி.மு.க.,வினருக்கு தெரிந்தது எப்படி; பட்டுவாடாவிற்கு வைக்கப்பட்டிருந்த பணம், தகவல் தெரிவித்தும் எப்படி மாயமானது; சம்பவ நேரத்தில் பொறுப்பான தேர்தல் அதிகாரி இல்லாமல், ஒரு ஊழியர் மட்டுமே பதில் அளித்தது ஏன்' என, அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
பின், செய்தியாளர்களிடம் திலகபாமா பேசுகையில், ''தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாகவும், இது ஜனநாயகத்தை பாதிக்கும். தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
இந்த நிலையில், நேற்று வியாசர்பாடி, பி.வி.நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தின் இடையே, சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கையில அரிப்பு எடுப்பவங்க பணத்தை வாங்கிக்குவாங்க. சொறிஞ்சு விட்டு போகிறவன் பணத்தை கொடுத்து விட்டு போவான். ..திமுகவையும் திருட்டுத்தனமா பணம் கொடுப்பதையும், வாங்குவதையயும் பிரித்துப்பார்க்க முடியாது.
பாஜகவின் டீம் என்று சொல்லப்பட்ட தேர்தல் ஆணையம் உண்மையில் திமுகவின் டீமாக செயல்படுகிறதோ ????
அரசு தேர்தல் அதிகாரிகளே 85 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களை ஏமாற்றி TVK க்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு வோட்டு போட்ட விவகாரத்தை ஏன் தினமலர் மற்றும் நாடுளினை தமிழ் நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை?
இம்போடென்ட் எலெக்ஷன் கமிஷன்
ஆண்மையற்ற தேர்தல் ஆணையம் என்று சொல்லிவிட்டீர்கள். என்ன தான் நாடு முன்னேறினாலும், எல்லாவற்றையும் தடுத்துவிட முடியாது அமைப்புகளால். பிரியாணி போட்டு உணவு உண்ணும் இலைக்கு அடியிலையே பணத்தை வைத்து தானம் செய்த காட்சியாச்ச்சே நம்ம கட்சி. ஒரு வழி தோற்றால் இன்னொரு வழியை கண்டுபிடிப்பார்கள். திரூடுடனாய் பார்த்து திருந்தஆவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. வாங்குபவனும் திருடன் கொடுப்பவனும் திருடன். முடிந்தால் நிகழ்வு நடக்கும்போது பாருங்கள். தனி நளினம் தனி இளிப்பு காட்சியளிக்கும் அங்கே.
AS PER LAW, CORRUPTION IS A TWO WAY SWORD. MEANS THE BOTH THE GIVERS AND THE ACCEPTORS ARE GUILTY. IF GIVING MONEY FOR VOTE IS ALSO COME UNDER THIS CATEGORY, WHY DONT THE AUTHORITIES ARREST BOTH THE GIVERS, THE POLITICAL PARTYS WORKERS AND THE TAKERS, THE VOTERS.
தீம்க்காவுக்கு பணநாயகத்தில் மட்டுமே நம்பிக்கை உள்ளது.மேலும்
-
திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு
-
சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா
-
அலுவலகத்தில் லட்சணக்கணக்கான பணம் பறிமுதல்; காங் எம்பி கார்த்தி சமாளிப்பு
-
அதிகாரங்களை ஏவி என்னை மிரட்ட முடியாது; விஜய்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை