அலுவலகத்தில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல்; காங் எம்பி கார்த்தி சமாளிப்பு

17

காரைக்குடி: உங்க அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் லட்சக்கணக்கான பணத்தை கைப்பற்றியதா? என நிருபர்கள் கேள்விக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சமாளிக்கும் வகையில் பதில் அளித்துவிட்டு நழுவி சென்றார்.



சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காங்., எம்.பி., கார்த்தி அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.13.40 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த இருவர் அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்த, காங்கிரஸ் எம்பி கார்த்தியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, ''என் கிட்ட பணம் இல்லை, யாரும் பணம் கொடுத்தீங்கன்னா வாங்கி கொள்கிறேன்'' என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சமாளிக்கும் வகையில் பதில் அளித்துவிட்டு நழுவி சென்றார்.

Advertisement