அதிகாரங்களை ஏவி என்னை மிரட்ட முடியாது; விஜய்
சென்னை: எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல், லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ம் தேதி நீங்கள் அனைவரும் விசில் புரட்சிக்குத் தயாராக வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்; என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும், நிர்பந்தங்களையும், சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் காணும் பிளவுவாத சக்தியான பாஜவும் என்று நம் மக்களே அறிவர்.
மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது.
இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும், அதன் தாக்கத்தையும், எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.
நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும், அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று. நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று. இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?. பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?.
மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும், இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.
எந்த அரசியல் கட்சி முன்புலமோ, பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை 'நீ வாப்பா'… 'நீ வா தம்பி'… 'நீ வாண்ணா'… 'நீ வா நண்பா'… 'நீ வா தோழா'… 'நாங்க பாத்துக்கறோம்'… என்ற உங்களின் பேரன்பும், பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.
இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும், என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும், எந்த தீயசக்தியாலும், எந்த பாசிச சக்தியாலும், எந்த 'மற்றும் பலர்' சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி.
பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.
ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் - லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக விசில் சின்னம் மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (18)
Mecca Shivan - chennai,இந்தியா
21 ஏப்,2026 - 12:09 Report Abuse
என்ன பேசுகிறோம் என்று சிறிதளவும் உணராமல் வெறும் காகித்தை பார்த்து படிக்கும் எதிர்கால முதல்வரே அடிப்படை அரசியல் அனுபவம் இல்லை குறைந்தபட்சம் அரசியல் புரிதலும் இல்லாத ஒரு விசிலை MGR மற்றும் விஜயகாந்துடன் ஒப்பீடு செய்வது மகா கேவலம். mgr அரசியல் கட்சியில் பணிசெய்து பிறகு கட்சி ஆரம்பித்தார் அவரொன்றும் தனது சினிமாவை மிரட்டி வாங்கிவிட்டார்கள் என்ற கோவத்தில் கட்சி ஆரம்பிக்கவில்லை . விஜயகாந்த் அடிப்படையில் திமுக அனுதாபியாக இருந்து பிறகு திமுகவிற்கு எதிராக கட்சி ஆரம்பித்தார். அரசியல் கருத்துக்களும் அரசியல் போராட்டங்களும் நடத்தியவர். பொது மக்களுக்கு நேரடியாக நலப்பணிகள் செய்தவர். ஜெயலலிதா அதிமுகவில் இணைத்துக்கொண்டு பனி செய்து பிறகு முதல்வரானார் . கலைஞர் கூட திரவிஷ இயக்கங்களில் வேலை செய்து பிறகு எப்படியோ திமுகவை கைப்பற்றினார் . நீங்கள் ? 0
0
Reply
Kadaparai Mani - chennai,இந்தியா
21 ஏப்,2026 - 12:08 Report Abuse
John Arokiasamy and aadhav arjuna are agents of dmk and stalin family. Vijay is aware of it. Another Kamal in making. kamal 2.0 version 0
0
Reply
rajasekar jayaraman - ,
21 ஏப்,2026 - 11:57 Report Abuse
நீங்க உண்மையிலேயே திராவிட கூட்டம் தான் அப்படியே அச்சு அசலாக திருட்டு திராவிடம் போலவே பேச கற்றுக் கொண்டீங்க, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளோடு புது மட்டையும் சேர்ந்து மூன்று மட்டைகளாகிவிட்டது. 0
0
Reply
kulanthai kannan - ,
21 ஏப்,2026 - 11:50 Report Abuse
விஜய் ஓரளவு நல்லவராக இருக்கலாம். அவரை இயக்கும் சக்திகள் தீவிர தேசவிரோத, இந்து மத விரோத கும்பல்கள்தான். சித்திரை தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லாதவர், தை பொங்கலைத் தமிழ் புத்தாண்டு என்று வாழ்த்தினார். 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
21 ஏப்,2026 - 11:47 Report Abuse
தனி விமானத்தில் செல்பவரையும் தரை இறங்கி வரவழைக்கும் சக்தி வாக்காளர்களுக்கு உண்டு. 0
0
Reply
முருகன் - ,
21 ஏப்,2026 - 11:40 Report Abuse
கரூர் துயர சம்பவம் நடக்க வில்லை என்றால் உங்கள் மதிப்பு வேறு
உங்கள் பிரச்சார உத்தி தான் அதற்கு காரணமாக அமைந்தது 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
21 ஏப்,2026 - 11:33 Report Abuse
இந்து மதத்தை அழிக்க திரை மறைவில் சதி செய்யும் எவரையும் விடமாட்டோம். ராமர் பாலத்தை இடிக்க சதி செய்த கும்பலை அதே கும்பல் திருப்பாராம் குன்றம் மலையையும் இடிக்க சதி. தமிழக்க்கத்திலிருந்து விரட் டுவோம். 0
0
Reply
தொளபதி - ,
21 ஏப்,2026 - 11:30 Report Abuse
ஜான் ஆரோக்கியசாமியை அருகில் வைத்துக் கொண்டு மத அரசியலை எதிர்த்தும், ஆதவ் அர்ஜுனாவை அருகில் வைத்துக் கொண்டு ஊழலை எதிர்த்தும் பேசும் தகுதியை இவர் எப்பொழுதோ இழந்து விட்டார். இவரது சினிமா பின்புலமும் வளர்ச்சியும் கூட நேர்மையற்றது தான். மக்களின் அறியாமையில் ஒற்றை இலக்க வாக்கு சதவீதத்திற்கு வாய்ப்புள்ளது. ஆண்டவன் அருளால் எந்த காலத்திலும் இவர் அதிகாரத்திற்கு வர வாய்ப்பில்லை. ஒரு வேளை வந்திருந்தால் ஊழலில் திமுகவை மிஞ்சி ஒரு சாதனை படைத்திருக்கும். 0
0
Kadaparai Mani - chennai,இந்தியா
21 ஏப்,2026 - 12:07Report Abuse
Best comment 0
0
Reply
Murugan - ,இந்தியா
21 ஏப்,2026 - 11:18 Report Abuse
விசில் ஒன்றே மாற்றத்தை தரும். ஒரு முறை வாய்ப்பளியுங்கள் . 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
21 ஏப்,2026 - 11:16 Report Abuse
சொந்த பிள்ளை மார் ஜாதி அதிகமாம் ....அதனால் திருச்சி ...சமூக நீதி மத சார்பற்ற கட்சி 0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
-
தி.மு.க. ரூ.2,500; அ.தி.மு.க. ரூ.1,500: ஒரு ஓட்டுக்கு விலை
-
திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு
Advertisement
Advertisement