தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
சென்னை: 'திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என தமிழகம் ஒரு இருண்ட நிலைக்குப் போய்விட்டது. இவற்றைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்கவே, சில காலம் தேவைப்படும்,' என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது. இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ, குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என, தமிழகம் ஒரு இருண்ட நிலைக்குப் போய்விட்டது. இவற்றைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்கவே, சில காலம் தேவைப்படும். இத்தகைய மோசமான சூழலில், திமுக ஆட்சி, இன்று தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சிறுமிக்கும் குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அம்மாம்தான், முதலில் உங்க பைகள் நிரப்பப்படணும்.
தீயசக்தி துடைத்தெறியவேண்டிய தருணம் வந்துவிட்டது. இதை அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்துவோம். தமிழகத்தை மீட்டெடுப்போம் .
உங்களைத் தான் தமிழக மக்கள் ஏதுமே செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார்களே!
ரிசாட் புக்கிங் செய்து பிறகு டெண்டர் விட்டு முதல்வர் துணை முதல்வர் தேர்வு செய்ய மூன்று மாதங்கள் ஆகும் என்பதை சூசகமாக அண்ணாமலை சார் சொல்கிறார் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமா
கருணாஸை கேட்கணும்.
மன்னார்குடி ஊரில் ராஜ மன்னார் ஸ்வாமி கொலு வீற்றிருக்கிறார். அவர் தண்டித்தால் நாம் நிம்மதி மூச்சு விடலாம்.
மக்கள் எதிர்பார்ப்பும் , அண்ணாமலையின் தாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையும் நல்ல படியாக இந்த 26 ல் நிறைவேறட்டும். நல்லதொரு நிர்வாகம் அமைந்து மக்கள் வாழ்க்கை சிறக்கட்டும்
அதிமுகவை என்ன செய்ய போகிறீர்கள்?
தமிழ்நாட்டில் உள்ள சில அடிமைப் கட்சிகளின் துணையின்றி, இந்த பாஜகவால் சொந்தமாக ஒரு இடத்தைக் கூடப் பெற முடிவதில்லை. இவர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்களுக்குச் சென்று அவற்றை மேம்படுத்தட்டும். பாஜக ஆளும் இந்த மாநிலங்கள் வெறும் நுகர்வோராகவே இருந்து கொண்டு, தமிழகம் மற்றும் பிற தென் மாநிலங்களின் வரி வருவாயை உறிஞ்சி வாழ்கின்றன.
மத்திய பாஜக ஒரு சிறுபான்மை அரசாங்கம். அது தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் கட்சி போன்ற இரண்டு அடிமைத்தனமான கட்சிகளின் உதவியுடன் இயங்கி வருகிறது.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்தை வெல்லப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும், வேண்டுமென்றே திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பழி சுமத்தி, சட்டமன்றத் தேர்தலில் ஒரு கெட்ட பெயரை உருவாக்க விரும்புகிறார்கள்.
பழனிச்சாமி அண்புமனி தினகரன் இவர்களில் யார் நல்லவர் என்று அண்ணாமலை சார் கூறினால் அவரை முதல்வர் ஆகவும் மற்ற இருவரையும் துணை முதல்வர் ஆக்க மக்களுக்கு எளிதாக இருக்கும்.மேலும்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
-
தி.மு.க. ரூ.2,500; அ.தி.மு.க. ரூ.1,500: ஒரு ஓட்டுக்கு விலை
-
திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு