என்.எஸ்.கே., - ரசாக் கார்டன் சாலையில் மேம்பாலம்: கோகுல இந்திரா வாக்குறுதி

சென்னை: அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, நேற்று காலை, என்.எஸ்.கே., நகர் ஒன்று முதல் 25 தெருக்கள், ரசாக் கார்டன் பகுதிகளில் ஓட்டு வேட்டை நடத்தினார்.

கூட்டத்தில், தனக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தர வேண்டும் என, கேட்டார். அவரிடம், அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பின், வாக்குறுதி அளித்தபடி முதியோர் உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, கோகுல இந்திரா வாக்குறுதி அளித்தார்.

பின், வாக்காளர்களிடம் கோகுல இந்திரா பேசியதாவது :

ஏற்கனவே அமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செய்துள்ளேன். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், என்.எஸ்.கே., - ரசாக் கார்டன் இணைப்பு சாலையில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.

நீண்ட நாள் கோரிக்கையான வீட்டு மனை பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரைப்பேன். கக்கன் நகர் - அமைந்தகரை செல்லும் கூவம் ஆறு இணைப்பு பாலம் மறுசீரமைக்கப்படும். அமைந்தகரை, மேத்தா நகர் கூவம் ஒட்டியுள்ள பகுதிகளில், வெள்ள தடுப்புச்சுவர் அமைக்கப் படும்.

அண்ணா நகரில் அடையாளமான அண்ணா வளைவு, பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement