சிவன்மலையில் தமிழ் புத்தாண்டில் பஞ்சாங்கம் வாசித்து சிறப்பு பூஜை
காங்கேயம் : காங்கேயம் அடுத்துள்ள, சிவன்மலை முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிவன்மலை
சுப்ரமணியசுவாமி கோவிலில் அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் அதிகம் பேர் வருவர், நேற்று தமிழ் புத்தாண்டு துவங்கியதையொட்டி, சிவன்மலை முருகன் கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், பூஜை நடந்தது.
பின்னர் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பக்தர்கள், கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இந்த பராபவ ஆண்டில், பஞ்சங்கத்தில் குறிப்பிட்டுள்ள நன்மை, தீமைகள் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து வள்ளி, தெய்வானை, சமேத சுப்ரமணியர் பக்தர்களுக்கு அலங்காரத்துடன் அருள்பாலித்தார். மதியம், 12:00 மணிக்கு உச்சிக்கால விஷேச பூஜை நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், மலைப்பாதையில் வாகனங்கள் செல்வதில் சற்று சிரமம் ஏற்பட்டது.
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை