சட்டக்கல்வி; எட்டாத வாக்குறுதிகள்

4

சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில், புதிய சட்ட பட்டதாரிகளுக்கு தன்னார்வ பயிற்சி திட்டம் தொடங்கப்படும். மாதம் 20,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பது உட்பட, சட்டசபையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

அவற்றின் விவரம்:





* திருச்சி, கோவை, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லுாரிகளில், அதிகவேக இணைய வசதிகளுடன், 'வைபை' மண்டலம் உருவாக்கப்படும்

* தமிழகத்தில் உள்ள 14 அரசு சட்டக் கல்லுாரிகளில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, சர்வதேச பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், சட்ட மாநாடுகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்

* அரசு சட்டக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்

* அரசு சட்டக்கல்லுாரி உதவிப் பேராசிரியர்களுக்கு, ஆசிரியர் மேம்பாட்டு திட்டம் மற்றும் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்

* திருச்சி, கோவை, திருநெல்வேலி, வேலுார் அரசு சட்டக் கல்லுாரிகளில், உள் விளையாட்டு திடல் மற்றும் உடற்பயிற்சி கூடம் நிறுவப்படும்

* இளங்கலை சட்டப்படிப்புகளில், தேசிய மாணவர் படை திட்ட பாடம் அறிமுகப்படுத்தப்படும்

* தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில், சைபர் ஸ்பேஸ், சட்டம் மற்றும் நீதி என்ற புதிய பாடப்பிரிவில் முதுகலை சட்டப்படிப்பு ஆரம்பிக்கப்படும்

* தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கீழ் செயல்படும் சட்ட ஆராய்ச்சி துறையின் திறனை, சர்வதேச அளவில் மேம்படுத்தும் திட்டம் 15 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும்

* சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி, புதுப்பாக்கம், செங்கல்பட்டு, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லுாரிகளில், கூடுதலாக முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகள் ஆரம்பிக்கப்படும்

* திருநெல்வேலி, வேலுார் அரசு சட்டக் கல்லுாரிகளில், 14 கோடி ரூபாயில், புதிதாக நுாலக கட்டடம் கட்டப்படும்

* புதிய சட்ட பட்டதாரிகளுக்கு, தன்னார்வ பயிற்சி திட்டம் தொடங்கப்படும். மாதம் 20,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

* அரசு சட்டக் கல்லுாரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு, ஆசிரியர் மேம்பாட்டு திட்ட பயிற்சி வழங்கப்படும்

* அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ்நாடு பாடநுால் கழகம் வாயிலாக வினியோகிக்கப்படும்

* அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள், சட்டக் கல்வியில் தகவல் தேடல் மற்றும் குறிப்பு ஆதாரங்கள் அணுகுதலை எளிமையாக்குவதற்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளிலும் மின் நுாலகம் அமைக்கப்படும்

* சட்டத்துறை நுாலகத்தில், தகவல் தேடல் மற்றும் குறிப்பு ஆதாரங்கள் அணுகுதலை எளிமையாக்க, மின் நுாலகம் அமைக்கப்படும்

* வணிக வழக்குகளை விசாரிக்க, ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement