சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; இருவர் கைது
காரைக்குடி:
சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி அலுவலகம் உள்ளது. இங்கு காங்., மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் என பலரும் வந்து செல்வர். மார்ச் 11ம் தேதி காலை எம்.பி., அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தை திறந்து பார்த்த போது, வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது.
சிவகங்கை மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் வந்து ஆய்வு செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த [நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட ( புதுவயலைச் சேர்ந்த அப்துல் ரபீக் முகம்மது ஆசிக் 22, புதுவயலைச் சேர்ந்த கல்லூரி மாணவரான திருப்பதி மகன் சிவா என்ற யுகேந்திரன் 19 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சம்புவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
'ஈரான் அதிபர் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கார்த்தி எம்.பி., தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாட்டில் குண்டு வீசியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்