மோகனை வெற்றி பெற செய்யுங்கள்: அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சம்பத் பேச்சு 

பண்ருட்டி: பண்ருட்டி, திருவதிகையில், அ.தி.மு.க., வேட்பாளர் மோகனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் சம்பத் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் மக்களுக்காக செய்யவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கை பொய்யான ஏமாற்று அறிக்கை. அ.தி.மு.க., பழனிசாமி முதல்வர் ஆவது உறுதியாகியுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு, ரூ.10 ஆயிரம் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மோகன் நல்லவர், வல்லவர் . அவரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

பண்ருட்டி மக்களுக்கு அரசின் திட்டங்களை மோகன் கொண்டு வருவார். அவரை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

இதில் பா.ஜ., மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க., மாவட்ட தலைவர் கவுரிசங்கர், நகர அவை தலைவர் ராஜதுரை, துணை செயலாளர் ரகுபதி, முன்னாள் நகர செயலாளர் முருகன், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் வினோத்குமார், முன்னாள் நகர தலைவர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement