அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அரசு ஊழியர் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தலைவர் கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், வன்கொடுமை தடுப்புச்சட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர் சக்திவேல் அம்பத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தி மன்ற இயக்க மாநி செயலாளர் ஜெயசீலன் பங்கேற்றார்.
நத்தம் : -நத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மூன்றுலாந்தர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் மயில்ராஜ் கலந்து கொண்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொகுதி தலைவர் சுப்பிரமணி, தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கத்தமிழன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது.
வேடசந்துார் : விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர்கள் முத்துக்கணேசன், திருமாமணி பங்கேற்றனர்.
மேலும்
-
சேலத்தில் ஓட்டளித்தார் இபிஎஸ்; ஓட்டளிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான் பேட்டி
-
மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்; 152 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு
-
சொந்த ஊருக்கு திரும்பிய மக்கள்; பஸ் வசதி இல்லாததால் போராட்டம்
-
ஓட்டுப்பதிவில் சாதனை நடக்கணும் : தமிழக மக்களுக்கு மோடி வேண்டுகோள்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு