எடப்பாடியில் இபிஎஸ், சென்னையில் விஜய், சீமான் ஓட்டுப்பதிவு
நமது நிருபர்
சேலம் சிலுவம்பாளையத்தில் மனைவி, மகனுடன் வந்து, 8வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் இபிஎஸ் ஓட்டளித்தார். அதேபோல், சென்னை நீலாங்கரை ஓட்டுச்சாவடியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஓட்டளித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

சேலத்தில் ஓட்டளித்த பிறகு நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: நடந்து வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு சென்று தனது ஜனநாயக கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நான் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன், என்றார்.
அதேபோல், சென்னை நீலாங்கரை ஓட்டுச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றிய பிறகு நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: வெளிநாடுகளில் வாழும் நமது சொந்தங்களில் சிலர் ஆர்வமாக ஓட்டளிக்க வருகின்றனர். சிலர் வர முடியாமல் போய் விடுகிறது. இங்கே தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கு தபால் ஓட்டு செலுத்த வைக்கிறார்களோ, அதே மாதிரி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சிலர் தொகுதிகள் நிற்க வேண்டும் என்றால் அவர்கள் ஓட்டுகளை செலுத்த முடியாமல் போய்விடுகிறது. அதனை தவிர்ப்பதற்கு தேர்தல் கமிஷன் கவனத்தில் எடுத்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் நமக்கு இருக்கும் கடைசி வலிமை, கருவி என்பது ஓட்டு தான். அதனை நாம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு 75 சதவீதம், 80 சதவீதம் என 100 சதவீதம் வாக்கில் இவ்வளவு தான் பதிவு ஆகிறது என்றால் ஓட்டு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்னை என்று கேள்வி வருகிறது.
உங்களை நம்பி தான் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 100 சதவீதம் ஓட்டினை செலுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து கணக்கில் காட்டாமல் மறைப்பது இது எல்லாம் தான் தேச துரோகம் என்பது இல்லை. ஓட்டு செலுத்தாமல் இருப்பதும் ஒருவித தேச விரோத குற்றம் தான். ஜனநாகய துரோகம் தான். இதனை மக்கள் செய்ய கூடாது.
கற்றவர்கள் தான் மற்றவர்களுக்கு வழி காட்ட வேண்டும், எல்லோரும் நாம் ஒரு ஓட்டு செலுத்தி என்னவாக போகிறது என்று நினைக்கின்றனர். அப்படி இல்லை ஒரு வாக்கில் இருந்து தான் மாற்றம் வரும். ஓட்டளிப்பது நம் பொறுப்பும், கடமையும், முதன்மையானது. தவறாமல் அனைவரும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.
ஓட்டளித்த தலைவர்கள்!
அதேபோல் மத்திய அமைச்சர், எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர்.
வாசகர் கருத்து (23)
Murug Mani - ,இந்தியா
23 ஏப்,2026 - 15:01 Report Abuse
அந்த நடிகரும் அரசியல்வாதியுமானவரிடம் தமிழ்நாட்டைப் பற்றிய எந்த நுண்ணிய அல்லது பரந்த தரவுகளும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பிரச்சினையும் அவருக்குத் தெரியாது. முறையான பகுப்பாய்வோ அல்லது அதற்கான தீர்வோ இல்லாமல் அவர் வெறுமனே காற்றில் பேசுகிறார். அதன் செலவினங்களை அறியாமலும், அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காகவும் ஏதோ ஒரு தேர்தல் அறிக்கையை வெறுமனே வெளியிடுகிறார்.
நமது வெறித்தனமான ஆதரவாளர்கள் அதை வெறுமனே ஆரவாரம் செய்கிறார்கள். நீங்கள் மாறாத வரை அல்லது சரியாகச் சிந்திக்காத வரை எதுவும் மாறாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் 0
0
Reply
Murug Mani - ,இந்தியா
23 ஏப்,2026 - 15:00 Report Abuse
அகில இந்திய அளவில் பாஜக ஏற்கனவே சரிவைச் சந்தித்து வருகிறது. மக்களவையில் அவர்களுக்கு ஒற்றைக் கட்சிப் பெரும்பான்மை இல்லை, மத்தியிலும் பாஜக சிறுபான்மை அரசே ஆட்சியில் உள்ளது. சில அடிமைத்தனமான கட்சிகளின் உதவியுடன் தமிழ்நாட்டில் காலூன்ற அவர்கள் விரும்புகிறார்கள், இது முற்றிலும் சாத்தியமற்றது 0
0
Reply
PATTALI - chennai,இந்தியா
23 ஏப்,2026 - 14:54 Report Abuse
ஜெயித்தாலும் தோற்றாலும் தேர்தலுக்கு பிறகு தி மு க, - பிஜேபி பக்கம் ஒதுங்கப்போறதுதான் அடுத்த காமடி. 0
0
Reply
சிவகங்கை சீமையிலே - ,
23 ஏப்,2026 - 14:06 Report Abuse
இதுல ஒருத்தர் மட்டும் பணம் அச்சடிக்கும் மெஷின் பாகிஸ்தான்க்கு குடுத்த மாதிரி தானும் ஜெயிக்க எதை வேண்டுமானாலும் செய்வார். UPA இரண்டில் தோல்வியை தழுவி பின்னர் இரண்டு நாள்கள் ரிசல்ட் நிறுத்தி வைத்து பேரம் பேசி ஜெயித்தவறிடம் கெஞ்சி ஜெயித்த மாதிரி அறிவித்து கொண்டார். 0
0
Reply
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
23 ஏப்,2026 - 13:05 Report Abuse
ஆமா... ஒரு மாபெரும் அரசியல்வாதி... சுதந்திர போராட்ட காலத்திலிருந்து கட்சி நடத்தி... தன் சொத்து, சுகம், சொந்த பந்ததைத்தையெல்லாம் இழந்து, கோவைச் சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனார் போல, மக்களுக்காக பாடுபட்டு வரும் விஜய்... மேலும் 2 மணிநேரம் வாக்குப் பதிவை நீட்டிக்கணும்னு அறிக்கை விட்டிருக்கிறாமே...? காலை 7 மணி முதல் கடந்த 6 மணிநேரமா... இவர் கட்சியைச் சேர்ந்த சில்லுண்டிப் பசங்களான தற்குறிகளே வாக்குச் சாவடியில் வரிசையில் நின்னு ஓட்டே போடலை... இவர் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுகிறார்... 0
0
manoj moonkre, mumbai - ,
23 ஏப்,2026 - 14:00Report Abuse
உங்க கட்சியில மாதிரி திருமங்கலம் ஃபார்முலா, கரூர், கோவை, Erode அதெல்லாம் அவங்களும் செய்ய இன்னும் 2 தேர்தல் ஆகும். அதுவரை அறிக்கை தான். இப்போ தற்குறி பற்றி பேசும் மேதாவிகள் ஊ ஃபீஸ் அப்புறம் இரண்டு மூன்று தேர்தலுக்கு முன்பு முன்னாள் தற்குறி கள் தான். போய் வீட்ல பெரியவங்க இருந்தா கேளு. தற்குறி மாதிரி கருத்துக்கள் போடாதே ஆங்காரம் 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
23 ஏப்,2026 - 11:32 Report Abuse
இத்தனை தலைகளும் தேர்தலில் தோற்றால் மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கும். 0
0
S Kalyanaraman - ,இந்தியா
23 ஏப்,2026 - 11:55Report Abuse
மிக சிறந்த கருத்து. 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
23 ஏப்,2026 - 12:58Report Abuse
அப்ப கூட பிஜேபி க்கு வோட்டு போட மாட்டார்களே 0
0
ஆகும் யார் தயவில் - ,
23 ஏப்,2026 - 14:02Report Abuse
அப்படி சொல்லி தான் இந்த இரண்டு திராவிடன்களும் பீ ஜே பி கூட கூட்டணியிலிருந்து மந்திரி பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் 0
0
Reply
Barathi - ,
23 ஏப்,2026 - 11:04 Report Abuse
பனையூர் பண்ணையார் ஓட்டு பெட்டியை பனையூர் வீட்டுக்கு எடுத்து வர சொல்லி கேட்டிருப்பார். 0
0
Reply
Nallavan - ,இந்தியா
23 ஏப்,2026 - 10:14 Report Abuse
வெளி நாடுகளில் இருக்கும் இந்திய வாக்காளர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் வகையில் வீடியோ கால் மூலம் ஓட் வரிசை எண், ஆதார் எண், தேர்தல்துறையால் வழங்கபட்ட தேர்தல் அட்டை, மூலம் ஆராய்ந்து , அவர்களுக்கும் ஓட்டுரிமை கொடுத்தல் நூறு சதவிகித வகை தேர்தல் துறை பெற முடியும், தேர்தல் கமிஷன் இதனை செய்ய முன் வருமா? 0
0
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
23 ஏப்,2026 - 13:01Report Abuse
என்னைக்கு... தான் பட்டினியாயிருந்தாலும், தன் குழந்தையை பட்டினியாக இருக்க விடாமல்... தனக்கு கிடைக்கும் ஒருவேளை சோற்றையும் தன் குழந்தைக்கு கொடுத்து, தன் பிள்ளையை காப்பாற்றும் அன்பின் மறுவடிவமான... தியாகத்தின் மறுஉருவமான தாய் போல... நம் தாய்நாடு... தான் வறுமையில் இருந்தாலும் அதாவது, தன்னிறைவு அடைய முடியாமல் போன நிலையிலும், தன் மக்களுக்கு வெளிநாடுகளிலும், உலக வங்கியிலும், நபார்டு வங்கிகளிலும் கையேந்தி பிச்சை பெற்று... தன் குழந்தைகளுக்கு உங்களைப் போன்று வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்க சென்றவர்கள் இலவசமாய் சுகாதாரம், கல்வி, மேம்பாட்டு போன்ற திட்டங்களை கடன் வாங்கி... அந்த குழந்தையை படித்து ஆளாக்கி வளர்த்து விட்டால்.... அன்பின் மறுஉருவமான தாயை நம் தாய்நாடு இந்தியாவை மறந்து... வசதிக்காக, படாடோப வாழ்க்கைக்காக வெளிநாடு சென்று, அந்நாட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும்பகலும் பாடுபடும் பணத்திற்காக... இலவசமாய் படித்து பட்டம் பெற்ற தாய்நாட்டை மறந்து போன்ற உங்களைப் போன்றவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதைவிட... இந்த நாட்டை மீண்டும் ஆங்கிலேயரிடமும் கொடுத்துவிட்டு அடிமையாக இருக்கலாம்... தான் பிறந்த தாய் மண்ணையும், தன் தாய்நாட்டையும் வசதிக்காக மறந்து அயல்நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபடும் உங்களைப் போன்றவர்கள்... நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை வெளிநாட்டினர்விட ஆபத்தானவர்கள்... உங்களுக்கு எப்படி வாக்குரிமை அளிப்பது... அதை தாய்நாடு செய்யாது. 0
0
Reply
பாமரன் - ,
23 ஏப்,2026 - 09:39 Report Abuse
எங்க வார் ரூம் ஓனர்... அமிரிக்கா போயி பெட்ரோல் பம்ப்ப கதறடிக்க போற முன்னாள் சிப்பு போலீஸ் ஓட்டு போட்டாறான்னு முதல் பத்தி நியூஸ் வரலன்னு ரோஜனையா இருக்கு... 0
0
Reply
charles - tirunelveli,இந்தியா
23 ஏப்,2026 - 09:13 Report Abuse
NTK should win, or at least Seeman should win in Karaikudi 0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
வீடுகள் கட்டித்தரக்கோரி பளியன்குடியில் ஓட்டு போட மறுத்த பழங்குடியின மக்கள் - பேச்சுவார்த்தைக்குப் பின் ஓட்டளித்தனர்
-
மறவபட்டியில் இரவு 7:15 வரை நீடித்த ஓட்டுப்பதிவு
-
ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
-
வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு
-
3 இடங்களில் தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு
-
வண்ணமயமான ஓட்டுச்சாவடிகள்
Advertisement
Advertisement