ஓட்டுப்பதிவில் சாதனை நடக்கணும் : தமிழக மக்களுக்கு மோடி வேண்டுகோள்

43

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்லில், இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து ஓட்டளிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.


குறிப்பாக, தமிழகத்தின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான ஓட்டுகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தபடியே தமிழகத்தில் இந்தமுறை அதிக ஓட்டுப்பதிவாகி உள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் பதிவாகிஉள்ளது. இறுதி ஓட்டு சதவீதம் விவரம் வெளியாகும் போதுஇந்த எண்ணிக்கை இன்னும்அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Advertisement