சென்னையில் 3 இடங்களில் இன்று விஜய் பிரசாரம்; போலீசார் அனுமதி
சென்னை: சென்னை தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணியில் இன்று (ஏப்ரல் 15) மதியம் 3 முதல் மாலை 6 மணி வரை தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
தமிழக அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பெரம்பூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை துவங்கினார்.
அவர் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் பகுதியிலும் பிரசாரம் செய்தார். அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார்.
பின்னர் பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுத்தும் காரைக்குடியில் அனுமதி கொடுத்த நேரத்தை தாண்டியதால் விஜயால் பேச முடியவில்லை. அவர் வெளிமாவட்டங்களில் பிரசாரத்தை முடித்த நிலையில், தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
அதன்படி, சென்னை தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணியில் இன்று (ஏப்ரல் 15) மதியம் 3 முதல் மாலை 6 மணி வரை தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அவருக்கு ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிரசாரத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். தவெகவினர் விஜயை வரவேற்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
உதய நிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் மிஸ்.நரி தயாரிப்பு இந்த ஜேக்கப் விசை திமுகவை எதிர்ப்பது போல நாடகம் ஆடி திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து மீண்டும் தன் முதலாளிகள் உதய் நிதி முதல்வர் ஆக கொடுத்த வேளையை செய்கிறான். தேர்தல் முடிந்ததும் கமல் போல காணாமல் போய் விடுவான்...
தேர்தலில் கில்லி எகிறும்
எவனுக்கு ஆயுள் பலம் இல்லையோ அவன் இங்கே போயிடாதீங்க..
இருபது லட்சம் பெருசா இல்லையா ?
டமில் நாட்டு ஸ்காட்லாந்து யார்டு புலீஸ் முதலில் இழுபறிக்கு பர்மிஷன் குடுத்துருவாங்க. அப்பறம் கனிமொழி தேர்தல் அறிக்கை மாதிரி ஒரு 100 கண்டிஷன்ஸ் போட்டு பர்மிஷன் குடுப்பாய்ங்க. இப்ப உடனே பர்மிஷன். குடுத்துட்டாய்ங்களா?
ஆறுமணிக்கு உள்ள மட்டுமே.. தாண்டினால் நான் வரட்டான்னு சொல்லிட்டு டாட்டா காட்டுவேன்.
விஜய்யின் பேரணிக்கு மட்டும் ஏன் காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும்? மற்றவர்களும் காவல்துறையிடம் அனுமதி வாங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். விஜய்யின் அனுமதி போல மார்த்தா கட்சியினர் அனுமதி ஏன் முன்னிலைப்படுத்தப்படவில்லை?
எனக்கு தெரிந்த சமையல்கார அம்மா நான்கு நாட்கள் திருடர் கட்சி கூட்டத்துக்கு சென்றார். வென்றார் இரண்டு ஆயிரம் ரூபாய் . உடல் நோய்வாய்ப்பட்டது. மருத்துவ செலவுகள் மூவாயிரம் ரூபாய் .
விஜய் கூட்டத்திற்கு தானாகவே கூட்டம் கூடி விடுகிறது
தானே கூடும் கூட்டத்தை திராவிட போலீசால் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பவில்லை.. அணைத்து கூட்டமும் ஓட்டாக மாறும் என்று சொல்லிவிட முடியாது.மேலும்
-
திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது
-
ஓட்டுச்சாவடிகளில் பல வண்ணங்களில் குறியீடு; வாக்காளர்களின் சிரமத்தை தவிர்க்க ஏற்பாடு
-
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் தான்; துல்லிய கருத்துகணிப்புகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
உங்கள் ஓட்டுச்சாவடி, பாகம் எண் வரிசை எண்ணை அறிவது எப்படி?
-
வைட்டமின் 'ப' வராததால் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பரிதவிப்பு
-
ரசிகர் கூட்டம் ஓட்டாகாது