மகளிர் இடஒதுக்கீடுக்கு வரவேற்பு; தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு; நிலைப்பாட்டை சொன்ன விஜய்!
சென்னை: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பார்லியில் நிறைவேற்றப்பட இருப்பதற்கு தவெக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்தார். ஆனால் அவர் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
அவரது அறிக்கை: தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை. மத்திய அரசு லோக்சபாவில் எம்பிக்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543ல் இருந்து 850ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், லோக்சபாவின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது.
இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள பார்லி., சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, பார்லியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.
பாரபட்சமான நடவடிக்கை
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும்.
அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக மத்திய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழக மக்களின் குரல், பார்லியில் ஒலிக்காமல் போகும். இது மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.
நிதிப்பகிர்வில் இழப்பு
மத்திய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு தண்டனையையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு வெகுமதியும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பார்லிமென்ட் தொகுதிகளின் எண்ணிக்கை, விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே தமிழகம் போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது.
பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழகத்திற்கு போதுமான நிதியையும் திட்டங்களையும் மத்திய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.
இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும். தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
ஏன் இந்த கூச்சல் போட புதுசா ஒரு கட்சி வேண்டுமா! நீங்க திமுக விலோ கான் கிராசிலோ சேர்ந்து விடலாமே அலைச்சலும் இல்லை மக்கள் அழிவும் இல்லை.
எல்லா மானிலங்களிலும் 50% அதிக இடங்கள் கிடைக்கும். அதாவது தமிழகத்தில் 39 இடங்கள் சுமார் 59 இடங்களாக அதிகரிக்கும். எல்லா மாநிலங்களிலும் செய்யப்படுவதால் விகிதாச்சாரம் மாறாது. தொகுதி மறு முறையீடு செய்யாமல் இது எப்படி சாத்தியமாகும்? இதை திருவாளர்கள் சோசப் விசய் , சுடாலின், அவர்களுக்கு வால் பிடிக்கும் கட்சித்தலைவர்கள் போன்றவர்கள் விளக்குவார்களா? இல்லை குட்டையைக் குழப்பத்தான் செய்வார்களா? .
சைமனுக்கும் ஜோசேப்புக்கும் போடும் ஒட்டு, ஸ்டாலினுக்கு போடும் ஒட்டு. தொகுதி மறு சீரமைப்பு, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு இன்றி அமையாதது.
தி.மு.க வின் பினாமி ஜோசப் விஜய்
B Team என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.
தமிழ்நாடு புதுச்சேரி எத்தனை மக்களவை தொகுதி ஏறினாலும் இறங்கினாலும் பிஜேபிக்கு பூஜ்யம் தான் கிடைக்கும். அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டாம். பிஜேபிக்கு ஓட்டு போடமாட்டார்கள் ஆனால் நிதி மட்டும் அதிகமா கேட்பார்கள். ஒண்ணுமே செய்யலன்னு போராடுவார்கள். சரி இங்க ஜெயித்தவங்களாவது கேள்வி கேட்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. வெளிநடப்பு செய்து டீ சமோசா கேன்டீனில் பொழுதை கழிக்கிறார்கள். மக்கள் பிஜேபி கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். ஏதாவது செய்தால்தான் நமக்கும் ஏதாவது நல்லது நடக்கும். சிந்தித்து செயல்படுவீர்.
ஜேக்கப் விசை திமுகவை எதிர்ப்பது போல நாடகம் ஆடி திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து மீண்டும் தன் முதலாளிகள் உதய் நிதி மற்றும் சபரிசன் கொடுத்த வேளையை செய்கிறான். தேர்தல் முடிந்ததும் கமல் போல காணாமல் போய் விடுவான்
நாங்கள் உங்களையும் ஆதரிப்போம். நீங்கள் எதுவும் சொல்லாமல் சினிமா வசனங்களை மட்டும் பேசிக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் கேட்கத்தான் போகிறார்கள், எல்லாவற்ருக்கும் DMK தான் காரணம் என்றால் காரணம் ஆனவர்களே இருந்து விட்டு போகட்டும் என்பார்களே
தொகுதி மறுசீரைப்பு என்றால் என்ன புரிந்துகொண்டு பேசவேண்டும் ஒரு தொகுதி என்பது 10 லட்சம் பேர் இருபதை 5/7 ல ட்சம் மக்களுக்கு ஒரு தொகுதி என்று ஆக்கினால் நமக்கு லாபமா நட்டமா ? இது மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படாது , என்று கூறியபிறகும் இன்னும் மசோதாவில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை கூட பார்க்காமல் திமுகவுக்கு வால் பிடிப்பதுதான் மாற்றமா . கண்மூடித்தனதின் உச்சம் .
பரந்தூர் விமான நிலையம் இப்படி தான் எதிர்ப்பு சொன்ன....இப்போ என்ன அத பத்தி ஒரு வார்த்தை இல்லை?மேலும்
-
திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு
-
சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா
-
அலுவலகத்தில் லட்சணக்கணக்கான பணம் பறிமுதல்; காங் எம்பி கார்த்தி சமாளிப்பு
-
அதிகாரங்களை ஏவி என்னை மிரட்ட முடியாது; விஜய்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை