சென்னையில் விஜய் ரோடு ஷோ பாதியில் ரத்து
சென்னை: சென்னையில் தவெக தலைவர் விஜயின் ரோடுஷோ பாதியில் ரத்து செய்யப்பட்டது. திநகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் ஓட்டு சேகரித்த அவர், புரசைவாக்கம் பகுதியில் ரோடுஷோவை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார்.
தமிழக அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பெரம்பூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை துவங்கினார்.அவர் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் பகுதியிலும் பிரசாரம் செய்தார். அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார்.












திநகரில் விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்திற்கு வந்த விஜய் வாகனம் ஓரிரு வினாடிகள் அங்கு நின்றுவிட்டு கிளம்பி சென்றது. விஜய் எதுவும் பேசவில்லை. இதனால் காத்திருந்த அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். பிறகு ஆயிரம் விளக்கு பகுதியிலும் பிரசாரம் செய்தார்.
ரத்து
வேப்பேரி தொகுதியில் விஜய் ரோடு ஷோ பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. திநகர், ஆயிரம் விளக்கு பகுதியை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். வேப்பேரி பகுதியில் திரண்டிருந்தவர்களை கிளம்பி செல்லும்படி மாவட்ட செயலர் அறிவித்தார்.
@block_B@
சென்னையில் விஜய் பிரசாரம் செய்தது தினமலர் சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.block_B
வெளில தெரியாம, விஜய் அவர்களுக்கு சிறுபான்மையினரின் , பல இயக்கங்கள் பின்னணியில் இருந்து கூட்டத்தை சேர்த்து காண்பிக்க உதவறாங்க. இந்த செய்தி தமிழ்நாடு உளவுத்துறை மூலம் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களுக்கு சொல்லப்பட்டிருக்கு.
எந்தவித ரியாக்சனுக்கும் அனுமதி இல்லை.
அவர் இந்திய பிரதம மந்திரி இல்லையே... அவற்றுக்கு குடுக்கும் போலீஸ் பாதுகாப்பபு கொடுங்கள்
இவர் வெல்வது உறுதியாகிவிட்டது
மக்களே உங்களுக்கு ஏதாவது புரியுதா??. எனக்கு ஒன்னுமே புரியல இந்த தமிழ் நாட்டில...... எல்லோரும் வளர்ந்த மாநிலம், படிப்பறிவுல முன்னணி தொழில்துறைல முனனணி என்றெல்லாம் சொல்றாங்க
ஆனா பாருங்க, இந்த சினிமா நடிகர் விஜயை பார்க்கறதுக்கு இப்படி பேயாய் அலைஞ்சு , பின்னாடியே ஓடுவதும், அவருக்கு பரிசு பொருள் வீசுவதும், எங்கெங்கே போறாரோ அங்கெல்லாம் போறதும்.....புரியவே இல்லைங்க இந்த
ரசிகத்தனம். படங்களையெல்லாம் பார்த்திருக்காங்க, மொபைல்ல பாக்குறாங்க, அப்படியும் இன்னும் என்ன பார்க்க விரும்பறாங்க.?? அவர் என்னவோ வானத்திலிருந்து வந்த தேவன்ங்கிற மாதிரி அலையுறாங்க. எதுக்கு? அவர் உங்களையெல்லாம் கரையேத்தி, படிச்சாலும், படிக்காவிட்டாலும் வேலை தந்து காசு பணம் தந்து வாழ்க்கையை உயர்த்தி தமிழ்நாட்டை மிகப்பெரிய லெவலுக்கு உயர்த்திடப்போறாரு....இல்ல....""" நல்ல ...புத்திசாலி... இளைஞர்கள்... இளைஞிகள்""" வாழ்க
MGRukkum வந்த்ததே அப்போ என்ன சோன்னேர்கள்
கோமளியும் ,மூடர் கூடமும்
இந்திய பிரதமர் மோடிஜிகூடத்தான் இன்னைக்கு கன்னியாகுமரியில் ரோடு ஷோ போயிருக்கார்... ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாக... மக்களை சந்தித்து வாக்கு சேகரித்திருக்கிறார்..... அவர் மேன்மக்களில் ஒருவர்... நீயும்தான் கன்னியாகுமரியில் ரோடு ஷோ பண்ண...? குரங்கு கூட்டத்தை வச்சிகிட்டு... நீயும் கொரில்லா குரங்கு மாதிரி ஆட்டம் போட்ட... “மேன் மக்கள்.. மேன் மக்களே...
பாஸ் உனக்கு என்ன ஆச்சி? மாற வேண்டாம், எப்பவும் போல மோடியை திட்டு, விடியலின் புகழ் பாடு
பாஸ் உள்குத்து உள்ளது.ப்ரதமருக்குக் கூட்டம் வரவில்லை.அதனால் அமைதியாக ப்ரச்சாரம் செய்கிறார் என்று சொல்கிறார்
அவனே கன்பீஸ் ஆயிட்டான்
இவரை நம்பி களமிறங்கியவர்கள் பாவம்.