'துள்ளி துள்ளி' பதின் பருவ பயிற்சி இன்று முதல் துவங்குகிறது
: இன்றைய இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் நோக்கில், 'துள்ளித் துள்ளி' என்ற பதின் பருவ (டீன் ஏஜ்) பண்பு பயிற்சி முகாம் பல்லடத்தில் இன்று (22ம் தேதி) தொடங்குகிறது.
திருப்பூர் வெற்றி நலவாழ்வு மையத்தலைவர் சுந்தர்ராஜ் கூறியதாவது:
குழந்தைகளை நல்வழிப்படுத்துவதில் இன்றைய பெற்றோர் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, பதின் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் யாருடைய அறிவுரையையும் ஏற்கும் மனநிலையில் இருப்பதில்லை.
நல்லது, கெட்டது எது என்பதைப் பிரித்தறியத் தெரியாத அந்தப் பருவத்தில், அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துவது அவசியம். இதற்காகவே இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் விபரங்கள்: பல்லடம்,வனம் அமைப்பு, வனாலயம் வளாகத்தில், பெண் குழந்தை களுக்கு, ஏப்ரல் 22 முதல் மே 3-ம் தேதி வரையும், ஆண் குழந்தைகளுக்கு, மே 6 முதல் மே 17-ம் தேதி வரை முகாம் நடக்கிறது.
முகாமில் கலைத்துறை, மருத்துவம் மற்றும் பொது வாழ்க்கை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
முகாம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, 77080 69255, 99447 25100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
-- நமது நிருபர் -
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை