கண்டாச்சிபுரத்தை வளர்ச்சி அடைய செய்வேன்: கவுதம சிகாமணி உறுதி

கண்டாச்சிபுரம்: முகையூர் வடக்கு ஒன்றியத்தில் தி.மு.க., சார்பில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். முகையூர் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த கண்டாச்சிபுரம்,அடுக்கம்,வீரங்கிபுரம் புதுப்பாளையம், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் திருக்கோவிலுார் தொகுதி தி.மு.க வேட்பாளர் கவுதமசிகாமணி ஓட்டு சேகரித்தார்.

கண்டாச்சிபுரம் பஸ் ஸ்டேண்ட்டில் கவுதமசிகாமணி பேசும்போது கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் எனது தந்தை பொன்முடி கல்வி பயின்றார். உயர்நிலை வகுப்புகளையும் இங்கு தான் படித்தார். ஆகவே எனக்கும் கண்டாச்சிபுரம் ஒரு வகையில் சொந்த ஊர் போன்றதாகும்.

திருக்கோவிலுார் தொகுதி உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டாச்சிபுரத்தில் அத்தியாவசிய வளர்ச்சிப் பணிகளை நிச்சயம் மேற்கொள்வேன் என்றார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி கண்டாச்சிபுரம் அரசு பள்ளிகளில் தான் படித்த காலங்களை நினைவு கூர்ந்து ஓட்டு சேகரித்தார்.

இதில் முகையூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர் ரவிக்குமார், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், வி.சி.,நிர்வாகி விடுதலை செல்வன், தே.மு.தி.க நிர்வாகி முருகன் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement