ரூ.10 கோடி நகைகள் சோதனையில் சிக்கின
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி--ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் செல்வமீனாட்சி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் தேர்தலை முன்னிட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். தேனியில் இருந்து சீகுள் குளோபல் பிரீசியஸ் லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரிட்ட வாகனத்தில் ரூ.10 கோடியே 78 லட்சத்து 71 ஆயிரத்து 821 மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் 30 க்கும் மேற்பட்ட பெட்டிகளில் கொண்டு வந்தனர்.
வாகனத்தில் வந்த மேலக்காலைச் சேர்ந்த சங்கரபாண்டியன் 34, பல்வேறு நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அவரிடம் இருந்த ஆவணங்களில் முரண்பாடு இருந்ததால் நகைகளை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். வருமான வரித்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் வி.சி., வேட்பாளருக்கு வரவேற்பு
-
தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றி ;நிர்வாகிகளிடம் திருமாவளவன் வேண்டுகோள்
-
ஓட்டுபோட மூதாட்டிக்கு பணம் கொடுத்தவர் மீது வழக்கு
-
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
-
போலீஸ் ஸ்டேஷன் முன் கத்தியுடன் தகராறு :வி.சி., கட்சியினர் 5 பேர் மீது வழக்கு
-
சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி
Advertisement
Advertisement