சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுயேட்சை வேட்பாளர் சண்முகசுந்தரம், ஆதரவாளர்களுடன் சிறுமுகை நகரம், வச்சினம்பாளையம், உட்பட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
எனக்கு சீட் கிடைக்கவில்லை என்ற உடன், மக்கள் கவலைப்பட்டனர். கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த போது, பலர் கண்ணீர் விட்டு அழுதனர். இவர் வெற்றி பெற்றிருந்தால், பல நலத்திட்ட உதவிகள் செய்து தருவாரே என, வெளிப்படையாக பேசினர்.
தலைமை அறிவித்தால் மட்டும் ஜெயிக்க முடியுமா. சூழ்ச்சி என்றும் வெல்லாது. நீதியும், தர்மமும் வெல்லும். அனைவர் வீட்டிலும் நான் வழங்கிய நலத்திட்ட உதவி பொருட்களில், ஒரு சின்னம் இருக்கும்.
அச்சின்னத்தில் நின்றிருந்தால், 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் இரு மாதங்களுக்கு முன்பே, ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளேன்.
நான் கொடுத்த நலத்திட்ட உதவி பொருட்களில் ஒன்றான பக்கெட், சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது இறைவனின் அருள். உங்களை தேடி ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு பலமுறை வாய்ப்பு கொடுத்தீர்கள்.
இம்முறை டி.ஆர்.எஸ்.,க்கு வாய்ப்பு தாருங்கள். நான் வெற்றி பெற்றால், பில்லூர் அணையை தூர்வாரி, தண்ணீரை அதிக அளவில் தேக்கி குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பேன். டோமான் பகுதியில் புதிய அணை கட்ட முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை