கணவரை கொல்ல முயன்ற கும்பலால் மனைவி சரமாரியாக வெட்டி கொலை
புதுடில்லி:வட மேற்கு டில்லியின் ஆதர்ஷ்நகர் பகுதியில், சாலையோரம் துாங்கிக் கொண்டிருந்த பலுான் வியாபாரியும், அவரது மனைவியும், மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில், பெண் இறந்தார். இருவரையும் வெட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
அஷு, 40, மற்றும் அவரது மனைவி ஆகியோர், அந்த பகுதியில் பலுான் விற்று, பிழைப்பு நடத்தி வந்தனர். இருவரும், இரவு நேரங்களில், அந்த பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே சாலையோரம் துாங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் நள்ளிரவில், இருவரும் துாங்கிக் கொண்டிருந்த போது, திடீரென மர்ம நபர்கள், அஷுவை அரிவாளால் வெட்டினர். அதை தடுக்கும் நோக்கில் பாய்ந்த அவரின் மனைவியை, அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில், மனைவி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இருவரையும் வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருவரையும் அரிவாளால் வெட்டியதில் மனைவி இறந்ததை அடுத்து, படுகாயம் அடைந்த கணவர், பாபு ஜெகஜீவன்ராம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக, டாக்டர்கள் கூறினர்.
அவர் கண் விழித்தால் மட்டுமே, அவரை வெட்டி, கொல்ல முயன்றது யார் என்பது தெரிய வரும்.
மேலும்
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
-
தி.மு.க. ரூ.2,500; அ.தி.மு.க. ரூ.1,500: ஒரு ஓட்டுக்கு விலை
-
திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு
-
சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா
-
அலுவலகத்தில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல்; காங் எம்பி கார்த்தி சமாளிப்பு