திமுக தோற்க வேண்டும்; தமிழகம் ஜெயிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு கோவையில் பிரசாரம்
கோவை : “தமிழகத்தில் மோசம் இல்லாத கிராமம் இல்லை. நாசம் பண்ணாத நகரம் இல்லை. திமுக தோற்க வேண்டும். தமிழகம் ஜெயிக்க வேண்டும்” என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
கோவை கோல்டுவின்ஸ்சில் உள்ள மெர்லிஸ் ஓட்டலில் தே.ஜ.., கூட்டணி வேட்பாளர்கள், பா.ஜ., அதிமுக பிரமுகர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். கோவையை சேர்ந்த முக்கிய தொழில் அமைப்புகளும் பங்கேற்றன.
கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: தொகுதி மறுவரையறை மசோதாவையும், மகளிர் மசோதாவையும் தோற்கடித்ததால், திமுக, காங் எதையும் சாதிக்கவில்லை. பாதிக்கப்போவது தென் மாநிலங்கள் தான். இது பெண்களுக்கும், தென் மாநில மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி. பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை போட்டுள்ளனர்.
முதலீடு
நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்துக்கு முன்பும், பின்பும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இரண்டு ஆண்டுகளிலேயே கூகுள் நிறுவனம், டேட்டா சென்டர், குவாண்டம் கம்ப்யுட்டிங் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப மையங்களை 15 ஆயிரம் கோடி முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம்.
தயக்கம்
கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளை மேம்படுத்தி வருகிறோம். 5 ஆயிரம் ஏக்கரில் ஐதாராபத்தில் பெரிய விமான நிலையத்தை கொண்டு வந்தள்ளது; அமராவதியில் 2500 ஏக்கரில் விமான நிலையம் அமையவிருக்கிறது. விமான போக்குவரத்தை உயர்த்தினால் மக்களின் பொருளாதாரம் உயரும் என்ற இலக்கை கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால், கோவை விமான நிலையத்துக்கு 500 ஏக்கர் நிலம் கொடுக்கவே தயக்கம் காட்டுகிறது தமிழக அரசு.
@quote@திமுக ஆட்சியில் ஊழலும், போதை பொருட்களும் தான் முன்னேறியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களுக்கான எந்த திட்டமும் இல்லை. பாட்டிலுக்கு 10 ருபாய் கலாச்சாரம்தான் ஓங்கியுள்ளது. இந்து தர்மம் இல்லை.
quote
கடவுள் எதிர்ப்பு
இந்திய அளவில் கோவில்கள் அதிகம் நிறைந்த தமிழகத்தில், கடவுளை எதிர்க்கின்றனர். தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறை வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. மோசம் இல்லாத கிராமம் இல்லை. நாசம் பண்ணாத நகரம் இல்லை. தி.மு.க.,தோற்க வேண்டும். தமிழகம் ஜெயிக்க வேண்டும். பின் தங்கிய தமிழகம் முன்னேற வேண்டுமானால், இரட்டை இன்ஜின் ஆட்சி வேண்டும். அதற்கு தமிழகத்தில் தே.ஜ.,கூட்டணி ஆட்சி அமையும். தமிழகம் முன்னேறும். சரியான நேரத்தில் சரியான பிரதமராக உள்ளார். இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. மத்தியில் மோடி ஆட்சி இருக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
கோவையில் அதிமுக, பாஜ நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டி:புதிதாக துவக்கப்பட்டுள்ள கட்சிகள் குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. தேர்தலில் போட்டியிட்ட பிறகு தான் அவை பற்றி தெரியும்.
தமிழகத்தில் இரண்டு கூட்டணிகள் தான். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மற்றொன்று திமுக தலைமையிலான இண்டி கூட்டணி. கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் நிலையான ஆட்சியை தேஜ கூட்டணி அளித்துள்ளது. எங்கெல்லாம் இரட்டை இன்ஜின் அரசுகள் உள்ளனவோ அங்கு முன்னேற்றம் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. சென்னை தனது பொலிவை இழந்து விட்டது. பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன.
ஏன்
தொகுதி மறு வரையறை, பெண்கள் மசோதாவை தோற்கடித்தது தென் மாநில மக்களுக்கும், பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி. திமுக இதை ஏன் எதிர்த்தது? அதனால் என்ன கிடைக்கப்போகிறது?. டில்லியை தோற்கடித்து விட்டது என்று சொல்கிறீர்கள். டில்லியை நீங்கள் தோற்கடிக்கவில்லை. தென் மாநிலங்களின் பங்கினை தோற்கடித்துள்ளீர்கள். மோடி அரசு 50 சதவீத தொகுதிகளை அளித்து மேம்படுத்தியுள்ளதை காட்டியுள்ளது.
30 ஆண்டுகளாக 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர். தேவகவுடா, வாஜ்பாய் உள்ளிட்டோர் பிரதமராக இருந்தபோது முயன்றனர். ஆனால், நடக்கவில்லை. இந்த முறையும் மோடி இதை கொண்டு வந்தார். தோற்கடித்து விட்டு எதையோ சதித்து விட்டதாக நினைக்கிறார்கள். என்ன சாதித்தார்கள். உங்களது அரசியல், மோடி அரசின் முன்னேற்றத்தை தான் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது பெண்களுக்கு செய்யும் மாபெரும் அநீதி. இது நம் நாட்டு பெண்களுக்கான தோல்வி.
நிலைக்க முடியாது
தொகுதி மறு சீரமைப்பு 1971 ம் ஆண்டு கணக்கீட்டின்படி தொகுதிகள் பிரிக்கப்பட்டன. இவர்களது கோரிக்கைப்படி 2027ல் நடக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால், தொகுதிகள் குறைய வாய்ப்பு உள்ளது. தென் மாநிலங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு தயாராக உள்ளீர்களா? அரசுக்கு சொத்துக்களை சேர்க்காமல், வருமானத்தை ஈட்டாமல் இலவசங்களை எப்படி கொடுக்கப்போகிறீர்கள்? வருமானம் இல்லாமல், நாட்டின் மேம்பாடு இல்லாமல் இலவசங்களைக் கொடுத்தால் ஒரு அரசு நிலைக்க முடியாது.
ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தெலுங்கு கால்வாய் வழியாக தமிழகத்துக்கு தண்ணீர் தருகிறோம். காவிரிக்கும் தண்ணீர் தரப்போகிறோம். ஆறுகளை இணைத்து இறுதியாக காங்கையோடு இணைப்பதும் சாத்தியமாகும்.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எல்லாமே வெளிப்படையாகும்; நம்பகத்தன்மையாக மாறும். அப்போது ஊழல் பற்றி மக்கள் அறியும்போது மாற்றம் வரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கோவை நாயுடுகளின் ஓட்டு தெலுங்கர் முன்னேற்றக் கழகத்திற்குத்தான்.
நாயுடு முழுக்க முழுக்க ஆந்திர முன்னேற்றத்திற்காவே உழைப்பவர் அவருக்கு ஈடு இனி எந்த அரசியவாதியும் இந்தியாவிலே கிடையாது
ஓ...கோவையிலுள்ள மனவாடுகள் கூட்டமைப்பா??
அது வேற வாய்
நீங்கள் எல்லாம் யாருயா? தமிழக நலன் குறித்து தமிழர் பார்த்து கொள்வர், நீர் உங்க மாநிலத்தை கவனியும், பாஜ தமிழகத்தில் வெற்றியே பெறலை, அதற்குள் வடநாட்டில் இருந்து பலபேர் படையெடுத்து வந்து தமிழருக்கு வேதம் ஓதுகிறார்கள், ஒருவேளை பாஜ வெற்றீ பெற்றுவிட்டால் அவ்ளோதான், தமிழரின் அனைத்து அடையாளங்களும் அழிகபட்டு, வடவர் வரலாறு எழுதபடும்
அதை தான் நாங்களும் சொல்லுகிறோம் தீயசக்தி ஒழியவேண்டும்....கன்னட ஈரவெங்காயமும் வேண்டாம்...இது ஆன்மீக பூமி....இங்கு பகுத்தறிவு வெங்காயங்களுக்கு இடமில்லை....!!!
இவர் முதல்வர். இப்போது இருக்கும் எதிர்கட்சிகள் நாட்டை பற்றி துளியும் யோசிப்பதில்லை.
நாட்டின் மிக சிறந்த முதல்வர். ஆந்திர மாநிலத்தின் புது ஒளி அவர். அவர் சொல்வது சரியாகவே இருக்கும். வறண்ட ஹைதெராபாத் பகுதியை மிக சிறந்த உலக IT தலைநகராக உயர்த்தியவர். அவரது உயிரை மிக பெரிய நக்ஸல் குண்டு வெடிப்பில் இருந்து காப்பாற்றிய திருமலை பெருமாளின் மீது உயர்ந்த பக்தியை கொண்டவர். அந்த கோவிலுக்கு நல்ல மனிதர்களை பணி அமர்த்தி நல்ல முறையில் பராமரிக்கிறார்.
நாயுடு ஒரு புத்திசாலிமட்டுமல்ல . ஒரு கடுமையான உழைப்பாளி . தென்னிந்தியாவில் உள்ள திறமைசாலி முதல்வர். ஆனால் மக்கள் தி மு க விற்கு தான் ஓட்டுபோடுவார்கள் . விதி ....
அடல்ஜி ""பசுவதை தடுப்பு சட்டத்தை"" கொண்டுவந்தபோது - அதை எதிர்த்து பல கோமாதாக்களை கொலை செய்ய உதவியவர் நீங்கள்.
அந்த பாபம் உங்களை விடாது.
ஆந்திராவில் 50 கோஷாலாக்கள் நிறுவி கோமாதா சேவை செய்யுங்கள்.
அப்பதான் நீங்கள் திருந்திவிட்டீர்கள் என்று நம்புவேன்.
ஏன் இப்படிமேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்