15வது மாடியிலிருந்து குதித்து 26 வயது வக்கீல் தற்கொலை

புதுடில்லி:டில்லியில், அடுக்கு மாடி கட்டடத்தின், 15வது மாடியிலிருந்து குதித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை, 9:15 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. கன்னாட் பிளேசில் உள்ள தி ராயல் பிளாசா ஹோட்டலின், 15வது மாடியிலிருந்து ராஜேஷ் சிங், 26, வயது வழக்கறிஞர் கீழே குதித்து படுகாயம் அடைந்தார்.

கீழ் தளத்தில் இருந்த பாதுகாவலர்கள், ராஜேஷ் சிங்கை லேடி ஹர்டிங்கே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

அதையடுத்து, அவரின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞரின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கன்னாட் பிளேசில் உள்ள மஹாவிர் என்கிளேவ் பகுதியில் வசிக்கின்றனர்.

மகன் இறந்த தகவல், அவர்களிடம் கூறப்பட்டது. போலீசார் மற்றும் தடய அறிவியல் துறை வல்லுனர்கள் அந்த இடத்தில் ஆய்வு செய்து, எதற்காக அந்த இளம் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement