'கவுன்டிங்' மையத்தில் கலெக்டர் ஆய்வு

ஈரோடு:சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரியில், ஆறு தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இங்கு பாதுகாப்பு மற்றும் ஓட்டு எண்ணும் அறைகளின் முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.


அங்கு கழிப்பிட வசதி, குடிநீர், மின்சாரம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் இடங்கள், ஓட்டுப்பெட்டி வைப்பறையில் இருந்து ஓட்டு எண்ணும் இடத்துக்கு எடுத்து வரும் வழிகள், தபால் ஓட்டு வைப்பறை, எண்ணும் அறை போன்றவற்றை ஆய்வு செய்தார். அவருடன் டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement