இ.வி.எம்., இயந்திரங்கள் 2ம் கட்டமாக ஒதுக்கீடு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இ.வி.எம்., உள்ளிட்ட
இயந்திரங்கள், இரண்டாம் கட்ட சுழற்சி மூலம் ஓட்டுச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஈரோடு
ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு
கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
(இ.வி.எம்.,), கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் போன்றவை தயாராக
உள்ளது. முதற்கட்ட சுழற்சி முறையில் கடந்த, 24ல் அந்தந்த தொகுதிக்கு
இயந்திரம் ஒதுக்கப்பட்டது.
இவ்வாறாக எட்டு தொகுதிகளுக்கு, 2,379 ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதல் இயந்திரங்கள் உட்பட, 3,532 மின்னணு ஓட்டுப்
பதிவு இயந்திரங்கள், 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,089 வி.வி.பேட் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில்
ஓட்டுச்சாவடி வாரியாக இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள் ஒதுக்கீடு
செய்யும் பணி கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. தேர்தல்
ஆணைய இணைய தளத்தில் சுழற்சி செய்து, அப்பட்டியல் தொகுதி வாரியாக
வழங்கப்பட்டது. தேர்தல் பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின்
பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேர்தல் ஆணைய இணைய தளத்தில் சுழற்சி
செய்து, அப்பட்டியல் தொகுதி வாரியாக வழங்கப்பட்டது.
இந்த இயந்திரங்களே அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு வரும், 22ல் எடுத்து செல்லப்பட்டு, 23ல் ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தப்படும்.
மேலும்
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
-
கஞ்சா கடத்தல் முக்கிய குற்றவாளி ஆறு ஆண்டுகளுக்கு பின் கைது