அண்ணன் சீர்வரிசையாக 1 பவுன் தங்ககாசு த.வெ.க., வேட்பாளர் பிரசாரத்தில் உறுதி

மொடக்குறிச்சி:-மொடக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் டி.சண்முகன், மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாவடிப்பாளையம் பகுதி கிராமங்களில், நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தவர், மக்கள் மத்தியில் பேசியதாவது:


த.வெ.க., ஆட்சி அமைந்ததும், மகளிர் உரிமை தொகையாக, 2,500 ரூபாய் வழங்கப்படும். அண்ணன் சீர்வரிசையாக ஒரு பவுன் தங்க காசு மற்றும் பட்டு சேலை வழங்கப்படும். அரசு போக்குவரத்து கழகங்களில் கட்டணம் இல்லாமல் மகளிர் பயணம் செய்யலாம். முதியோர் மற்றும் கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு, 3,500 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு பேசினார். பிரசாரத்தின்போது மக்களிடம் துண்டு பிரசுரங்களும் வழங்கினார்.

வேட்பாளர் சண்முகனுடன், மொடக்குறிச்சி ஒன்றிய த.வெ.க., செயலாளர் கவுதம், துணை செயலாளர் சிவகுமார், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் தினேஷ், கொடுமுடி ஒன்றிய செயலாளர் ராம்பிரகாஷ், கிழக்கு ஒன்றிய இணை செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Advertisement