பாட்ஷாவாக மாறும் ஸ்டாலின்; ரஜினி ரசிகர்கள் ஓட்டு சிக்குமா?

34

சென்னை: இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி உள்ளிட்ட எந்த கட்சிக்கும், ரஜினி வெளிப்படையான ஆதரவு தரவில்லை. ரஜினியின் ஆதரவை பெற, தி.மு.க., - பா.ஜ., தரப்பில், ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் நடக்கவில்லை. அதனால், ரஜினி ரசிகர்களின் ஓட்டுகள் எந்த கட்சிக்கு கிடைக்கும் என்பதில் குழப்பம் உள்ளது.

இந்நிலையில், பிரசாரத்தின்போது தனது பேச்சில் ரஜினியை நினைவுபடுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலின் காய் நகர்த்தும் தகவல் அம்பலமாகி உள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: ரஜினியின் சினிமா பட்டம் தான், சூப்பர் ஸ்டார். தி.மு.க., தேர்தல் அறிக்கைதான், இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார் என்றார் ஸ்டாலின்.

பின்னர் 'என்கிட்ட மோதாதே... நான் ராஜாதி ராஜனடா' என்ற பாடலை பாடி, அதன் வரிகளை மாற்றி பாடி, ரஜினி ரசிகர்களை கவர முயன்றார்.

மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா, பார்லிமென்ட்டில் தோல்வி அடைந்ததால், பாட்ஷா படத்தில் வரும் வசனத்தை, 'மாணிக்கம் போல் அமைதியாக பிரசாரம் செய்துவந்த எங்களை, பாட்ஷா மாதிரி மத்திய அரசு மாற்றிவிட்டது' என்று கூறினார்.

இப்படி எல்லாம் ரஜினி பாடல்களைப் பாடி அவரைப் போல் வசனம் பேசினாலாவது, அவரது ரசிகர்களின் ஓட்டுகள் தி.மு.க.,விற்கு வராதா என்பதுதான் முதல்வரின் எதிர்பார்ப்பு. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement