இறுதிக்கட்டத்துக்கு வந்த தேர்தல் பிரசாரம் துாக்கம் மறந்து ஓட்டு சேகரிப்பு பயணம்
ஈரோடு:தமிழக
தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடையும் நிலையில், கடந்த சில
நாட்களாக வேட்பாளர்கள், துாக்கத்தை மறந்து ஓட்டு சேகரிப்பு பணியில்
ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில், 8 தொகுதிகளில் தி.மு.க., -
அ.தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., உட்பட சுயேட்சைகள் என, 118
வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தி.மு.க.,வில் முதல்வர் ஸ்டாலின்,
துணை முதல்வர் உதயநிதி, எம்.பி., கனிமொழி, ஈரோடு மாவட்டத்தில்
பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரித்து பேசினர். இதேபோல் அ.தி.மு.க.,வில்
இ.பி.எஸ்., - பா.ஜ.,வில் அமித்ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்,
இந்திய கம்யூ., வீரபாண்டியன், த.மா.கா., வாசன் உள்பட பலர் பிரசாரம்
செய்து சென்றனர். தலைவர்கள் வருகை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை,
5:30 மணி முதல் 6:00 மணிக்குள் ஒன்று கூடி, 10:30 மணி முதல் 11:00 மணி வரை;
மாலையில், 4:00 மணிக்கு கூடி இரவு, 9:30 மணிக்குள் பிரசாரத்தை முடித்து,
உணவுடன் கவனிப்பும் வழங்கினர்.
கடந்த, 2, 3 நாட்களாக பிரசார
ஓய்வு நேரங்களில் வி.ஐ.பி.,க்கள், ஜாதிய நிர்வாகிகள், வசதி
படைத்தவர்கள், கூட்டணி நிர்வாகிகளை சந்தித்தல் என வேட்பாளர்கள்
ஓடி தவிக்கின்றனர். நாளை மாலை (21ம் தேதி), 6:00 மணிக்கு பிரசாரம்
நிறைவடைகிறது. இதனால் கடந்த வெள்ளி முதலே பிரசாரத்துக்கு
வருவோருக்கு இறைச்சி, பிற வெரைட்டி, இனிப்புடன் உணவு வழங்கி
உற்சாகப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் முக்கிய வேட்பாளர்களின்
பிரதிநிதிகள் வீடு தேடி வந்து 'கவனிப்பார்கள்' என்ற கனவுடன்
வாக்காளர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனால் தேர்தல்
பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டி களை கட்டுகிறது.
பணப்பட்டுவாடா எப்பொழுதுமேலும்
-
பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தி.மு.க., வில் ஐக்கியம்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு