நிலக்கரி நகரம் நெய்வேலிக்கு மணி மகுடம் சூட்டும் சாதனைகள்
நெய்வேலி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக, தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் கூறினார்.
இதுகுறித்து சபா ராஜேந்திரன் கூறியதாவது:
கடந்த, 40 ஆண்டுகளாக மக்களின் கனவாகவும், நீண்டநாள் பிரச்சனையாகவும் இருந்த இந்திரா நகர் மாற்று குடியிருப்பில் வசிக்கும் மக்கள், 4,169 பேரின் வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. கீழக்குப்பத்தில் ரூ.170 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ரூ.72 கோடியில் அடுக்குமாடி வீடுகள் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு ரூ. 72 கோடி மதிப்பீட்டில் காடாம்புலியூர், கீழக்குப்பம் பகுதிகளில் 840 அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன.
இந்திரா நகர் பகுதியில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் வளாகம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.3 கோடி மதிப்பில் மருங்கூர் மற்றும் வெங்கடாம்பேட்டை புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டது.
மேலிருப்பு, கீழிருப்பு, பணிக்கன்குப்பம், செம்மேடு, காமாட்சி பேட்டை ஆகிய பகுதிகளில் ரூ. 63 கோடியில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.73 கோடியில் தடுப்பணைகள் ரூ. 73 கோடியில் விசூர், எலந்தம்பட்டு, காமாட்சிபேட்டை, திருவாமூர், ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ. 40 கோடி மதிப்பில் கீழிருப்பு, விசூர், மேலிருப்பு ஆகிய பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன.
சொரத்துார், வடக்குத்து- பி.டி.ஆர்., நகர், அசோக் நகர், அண்ணா கிராமம், ஆகிய பகுதிகளில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. காடாம்புலியூர் பகுதியில் 33 ஏக்கர் பரப்பளவில், ரூ. 7.5 கோடி மதிப்பில் சிட்கோ வளாகம் அமைக்கப்பட்டது.
ரூ.60 கோடியில் சாலை வசதி நெய்வேலி தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராம பகுதிகளிலும், ரூ. 60 கோடி மதிப்பீட்டில் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தொகுதியில் அரசு பள்ளிகளில் ரூ. 16 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளன.
தொகுதிக்குட்பட்ட கிராம பகுதிகளில் 30 குளங்கள் துார்வாரப்பட்டுள்ளன. கீழ்மாம்பட்டு , பத்திரக்கோட்டை , வேகாக்கொல்லை, மதனகோபாலபுரம், இந்திரா நகர் மற்றும் மருங்கூர் ஆகிய பகுதிகளில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காடாம்புலியூர் ஊராட்சியில் அரசு உண்டு உறை விடப்பள்ளி ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு வீடுகள்
நரிக்குறவர் பழங்குடியின மக்களுக்கு ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் 29 வீடுகள் மற்றும் மின்சார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியின மக்களுக்கு 71 நபர்களுக்கு தனி வீடுகள் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் கட்டித் தரப்பட்டுள்ளன.
பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் மற்றும் பல்நோக்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இருளர் இன மக்கள் பயன் பெறும் வகையில் 300 நபர்களுக்கு பட்டாவுடன் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நெய்வேலியில் அரசு தொழிற்பயிற்சி கல்லுாரி கொண்டு வரப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்சார வழித்தடங்கள் அமைக்கப்பட்டு கீழக்குப்பம் முதல் பெரிய ஓடப்பன்குப்பம் வரை மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கீழகுப்பம், செடுத்தாங்குழி, பாப்பான்கொல்லை, நடுகுப்பம், வல்லம், சொரத்துார், கருக்கை, முத்தாண்டிக்குப்பம், பேர்பெரியாங்குப்பம், வீரசிங்கன்குப்பம், காட்டுக் கூடலுார், புலவன்குப்பம், முடப்பள்ளி, பெரியஓடப்பன்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்றுள்ளன.
இதுபோன்ற பல்வேறு சாதனைகளை குறிப்பிட்டு சொல்ல முடியும். இதுமட்டுமின்றி, இன்னும் எத்தனையோ செயல் திட்டங்களும், பணிகளும் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த சாதனைகளை நீட்டிக்கவும், திராவிட மாடல் அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் அமையவும், தொகுதி மக்கள், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து, பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு சபா ராஜேந்திரன் கூறினார்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு