தேர்தலில் வெற்றி பாதிக்கக்கூடாது: வி.சி.க.,வினருக்கு திருமா அறிவுரை
சென்னை: ''விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உட்கட்சி பிரச்னையால், தேர்தலில் வெற்றி பாதிக்கக்கூடாது,'' என, அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: வி.சி.க.,வில் போட்டியிடும் எட்டு தொகுதிகள் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் தோழமை கட்சிகளின் வெற்றிக்காக ஓட்டு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
தி.மு.க., மாபெரும் வெற்றி பெற்றது என்ற வரலாறை பதிவு செய்ய வேண்டும். நம் கட்சியின் உட்கட்சி பிரச்னைகளால், தோழமை கட்சிகளுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது.
ஓட்டுச்சாவடி வாரியாக துணை குழுக்களை உருவாக்கி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட வேண்டும்; தனித்தனி குழுவாக செயல்படக் கூடாது. அது, தோழமை கட்சிகளின் வெற்றியை பாதிக்கக்கூடும்.
கட்சிக்கான தேர்தல் நிதியை, ஒரு சில மாவட்ட கட்சி நிர்வாகம் மட்டுமே செலுத்தி உள்ளன. பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இன்னும் வழங்கவில்லை.
அவர்களின் பொறுப்பு, மறுபரிசீலனை செய்யப்படும். கட்சியில் பொறுப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும், தேர்தலுக்கு பின்னர் பொறுப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பிளாஸ்டிக் சைற் இதுவரை கண்டிராத தோல்விமேலும்
-
டில்லி அணி அசத்தல் வெற்றி: கடைசி ஓவரில் வீழ்ந்தது பெங்களூரு
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (18.04.2026)
-
குடகனாற்றில் நீர்வரத்து :சுயே., வேட்பாளர் உறுதி
-
வேட்பாளர் சீனிவாசன் மீது வழக்கு
-
மக்கள் எனும் நீதிபதிகள் தான் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும்;- சீனிவாசன் உருக்கம்
-
கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு புது தாலுகா : அமைச்சர் சக்கரபாணி