டில்லி பள்ளிகளில் தீ தடுப்பு வாரம்

புதுடில்லி, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் தீ விபத்தை தடுப்பது ஏற்பட்டால், தடுப்பது எப்படி என்பது குறித்து, 'பாதுகாப்பான பள்ளி வளாகம்' என்ற பிரசாரம் நேற்று பின்பற்றப்பட்டது.

பள்ளி மாநில பள்ளி கல்வித்துறை மற்றும் டில்லி தீயணைப்பு துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 14 துவங்கி, 20ம் தேதி வரை, தீ தடுப்பு பணிகள் வாரம் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு, டில்லியில் நேற்று, தீயணைப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டின் தீ தடுப்பு பணிகள் வாரத்தில், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த டில்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் கூறும் போது,''தீ விபத்து தொடர்பான விழிப்புணர்வு நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அவசியம். இதற்காக, தீ தடுப்பு குறித்த சாகச நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகின்றன. அதில், அனைவரும் பங்கேற்று, பலனடைய வேண்டும்,'' என்றார்.

Advertisement