கொண்டாபுரத்திற்கு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

ஆர்.கே.பேட்டை:மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்டது கொண்டாபுரம் கிராமம். கொண்டாபுரத்தில் இருந்து நேரடியாக ஆர்.கே.பேட்டை, சோளிங்கர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு இதுவரை பேருந்து சேவை ஏதும் துவங்கவில்லை. திருத்தணியில் இருந்து ருக்மணிபுரம், சாம்ராஜ்கண்டிகை மார்க்கமாக இயக்கப்படும் தடம் எண்: டி78 என்ற அரசு பேருந்தில திருத்தணி மற்றும் சோளிங்கருக்கு சென்று வருகின்றனர்.

இந்த பேருந்து வசதியை பெற கொண்டாபரத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆர்.கே.பேட்டையில் இருந்து சமத்துவபுரம் மற்றும் வெள்ளாத்துார் வழியாக கொண்டாபுரத்திற்கு தார் சாலை வசதி உள்ளது. எனவே, இந்த மார்க்கத்தில் கூடுதல் பேருந்து சேவை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement