சேதமடைந்த ரேஷன் கடை கட்டடத்தை இடிக்க கோரிக்கை

ஆர்.கே.பேட்டை:பழுதடைந்த ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சகஸ்ரபத்மாபுரத்தில் ரேஷன் கடை கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் பழுதடைந்துள்ளதால், கடந்த ஓராண்டாக பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டு, அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை இடித்து அகற்றாததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.

மேலும், கிராம சேவை மையத்தில் ஏற்கனவே வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், அதே கட்டடத்தில் ரேஷன் பொருட்களை இருப்பு வைத்து வினியோகம் செய்வதில் சிக்கல் நிலவுகிறது.

ரேஷன் கடைக்கு புதிய நிரந்தர கட்டடம் கட்டவும், பழுதடைந்துள்ள பழைய கட்டடத்தை இடித்து அகற்றவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement