சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பா.ம.க., ராமதாஸ்

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 86, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சேலம் மாவட்டம், பள்ளப்பட்டியில், 12ம் தேதி இரவு, சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அருளை ஆதரித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென மயக்கமடைந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

மேல் சிகிச்சைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராமதாஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பின், உடல்நிலை சீரான நிலையில், நேற்று ராமதாஸ் வீடு திரும்பினார்.

Advertisement