வருமானவரி சோதனை ரூ.1.15 கோடி சிக்கியது

திருநெல்வேலி: திருநெல்வேலியில், இரு வேறு இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், 1 கோடியே, 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள 'சாந்தி ஸ்வீட்ஸ்' உரிமையாளர் வீட்டில், வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டதில், 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், நாங்குநேரியில் லட்சுமி நடராஜன் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில், 75 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இவர், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரான தண்டையார்குளத்தை சேர்ந்தவர்.

இந்த சோதனை தொடர்பான முழு விபரங்களை, வருமானவரி துறையினர் வெளியிடவில்லை.

Advertisement