டூ - வீலர்கள் மோதி விபத்து எஸ்.ஐ., உட்பட இருவர் பலி 

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், ஓலைப்பாடியை சேர்ந்தவர் ஜெயராமன், 58; பாடாலுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். பெரம்பலுார் புறநகர் துறைமங்கலம், மின்நகரில் வசித்தார்.

நேற்று முன்தினம் இரவு, 9:50 மணியளவில் பணி முடிந்து, 'யமஹா பேசினோ' ஸ்கூட்டரில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

நான்கு ரோடு பகுதிக்கு வந்தபோது, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியிலிருந்து சென்னை நோக்கி 'பஜாஜ் பல்சர்' பைக்கில் எதிரே அதிவேகமாக வந்த சதீஷ்குமார், 29, என்பவர் ஜெயராமனின் ஸ்கூட்டரில் மோதினார்.

ஜெயராமன், தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தார். படுகாயமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவருடன் வந்த கறம்பக்குடியைச் சேர்ந்த இளையபெருமாள், 29, ஆகியோர் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்தார்.

Advertisement