நாகர்கோவிலில் பிரதமர் மோடி ஒரு மணி நேரம் ரோடு ஷோ தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க வேண்டுகோள்

நாகர்கோவில்: தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாகர்கோவிலில் ஒரு மணி நேரம் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி அண்ணாதுரை சிலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் இந்த ரோடு ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரோட்டின் இரு ஓரங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான தொண்டர்கள் இந்த தடுப்பு வேலி களுக்குள் கூடியிருந்தனர்.

மாலை 4:20 முதல் 5:20 மணி வரை ரோடு ஷோ நடந்தது.

துளிகள் * கூட்டத்தினரை பார்த்து கையசைத்தும், பூக்களை காட்டியும், பூக்களை மக்கள் மீது வாரி வீசியும் கை கூப்பி கும்பிட்டும் பிரதமர் உற்சாகப் படுத்தினார்.

* ரோடு ஷோ வழியில் காமராஜர், அம்பேத்கர்,அண்ணாதுரை சிலை மற்றும் எம்.ஜி.ஆர்., படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

* சில இடங்களில் தொண்டர்கள் தூக்கி பிடித்த போட்டோக்களை வாங்கி கையெழுத்து போட்டு கொடுத்தார்.

* வடசேரியில் வேட்பாளர்களை அறிமுகம் செய்த போது நாகர்கோவில் தொகுதி பா.ஜ., வேட்பாளர் எம். ஆர். காந்தியின் கையில் தட்டி, கட்டிப்பிடித்து அணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

* பல இடங்களிலும் பிரதமர் மோடி கேட்கும் அளவுக்கு அண்ணாமலைக்கு ஆதரவாக கோஷங்கள் எழும்பியது.

* பிரதமர் வந்த வாகனத்தில் பழனிசாமி, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உடன் நின்றனர்.

* வேட்பாளர்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கும் படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement