மக்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை கெங்கவல்லி தி.மு.க., வேட்பாளர் உறுதி

கெங்கவல்லி: கெங்கவல்லி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் சின்னதுரை, கெங்க-வல்லி, தெடாவூர், தலைவாசல், வீரகனுார் பகுதிகளில், உதயசூ-ரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசிய-தாவது:


இத்தொகுதியில் உள்ள கெங்க வல்லி, தலைவாசல் தாலுகாக்-களில் உள்ள மக்கள் பிரச்னைகள், கோரிக்கைகளை நன்கு அறிந்-தவன் நான். தொகுதி மக்களுக்கு, 2006ல் எம்.எல்.ஏ.,வாக இருந்து சட்டசபையில் குரல் கொடுத்து, கெங்கவல்லி தாலுகா, போலீஸ் ஸ்டேஷன், தம்மம்பட்டியில் கிளை பணிமனை, நடுவ-லுாரில் சமத்துவபுரம் போன்ற திட்டங்களை செயல்படுத்தினேன். தற்போது, எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றதும், மக்களின் கோரிக்-கைகளை சட்டசபையில் எடுத்துரைத்து, அரசிடம் தெரிவித்து அனைத்து திட்டங்களையும் பெற்றுத்தருவேன். முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளன. காலை உணவு திட்டம், மாணவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கு உரிமைத்தொகை, சுய உதவி குழுக்களுக்கு தொழில் கடன் போன்ற எண்ணற்ற திட்-டங்களை செயல்படுத்தியுள்ளார்.
அரசின் திட்டங்களை மக்களிடம் கூறினால் போதும். தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பர். தி.மு.க.,வில் கூட்-டணி பலம் மட்டுமின்றி மக்களின் ஆதரவு பலமும் அதிகரித்துள்-ளது. மதவாத அமைப்புடன் கூட்டணியில் உள்ள, அ.தி.மு.க., இத்தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும். தேர்தல் பிரசாரத்தில் மக்கள் தெரிவித்துள்ள கோரிக்கைகளை குறிப்பெடுத்து வைத்-துள்ளேன். வெற்றி பெற்றதும், மக்களின் கோரிக்கைகளுக்கு நட-வடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள், பிற மாநிலங்களே வியக்கும்படி உள்ளது. மீண்டும் முதல்வராக ஸ்டாலின் தான் வருவார். தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் செயல்-படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., காங்., தே.மு.தி.க., ம.தி.மு.க., வி.சி., இ.கம்யூ., மா.கம்யூ., கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement